பக்கம்:கன்னித் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கன்னித் தமிழ்


கச் சொல்லித் தம் தமிழின் தனிச் சிறப்பைக் காட்டு கிறார். திண்டுக்கல் நண்பரோ எந்த லெக்கில் கண்டோ மென்று ஞாபகமில்லாதவராக இருக்கிறார். சேலம் ஜில்லாக்காரரோ சிக்கிக்கொண்டதாகச் சொல்கிறார், நடுவில் தஞ்சாவூர் ஜில்லாக்காரர். ‘ உடம்பாமே?” என்று நம் அசெளக்கியத்தைப் பற்றி விசாரிக்க, செட்டி நாட்டு நண்பர் ‘ரெண்டு மாசமாக முடியவில்லை’ என்று நமக்காகப் பதில் சொல்கிறார். இவர்களுக் கிடையே நிந்துண்டு செங்கற்பட்டு ஜில்லாக்காரர் அருகில் உள்ள ரிக்ஷாவை இஸ்துக்கினு வா’ என்று ரிக்ஷாக்காரனைக் கூப்பிடுகிறார்,

பழைய காலத்தில் இத்தகைய வேறுபாடுகள் அதிகமாக இருந்திருக்கும். எனவே தமிழை ஆராய வேண்டுமானல், தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங் களில் வழங்கும் மொழியைக் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் கவனித்தாராம்."வடக்கே திருவேங்கட மும் தெற்கே குமரி யாறுமாகிய எல்லைகளுக்கிடையே தமிழ் கூறும் நல்ல உலகத்தில் வழங்கும் பேச்சு வழக் கையும் செய்யுளையும் ஆராய்ந்தார். அவற்றில் உள்ள எழுத்து சொல் பொருள் என்பவற்றை நாடினர்’ என்று பனம்பாரளுர் தொடங்குகிறார்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி. இலக்கணம் செய்ய வருபவர் இலக்கியத்தை ஆராய வேண்டும் தமிழ் மொழி, வழக்கிலும் புலவர் கள் இயற்றிய கவிதையிலும் உள்ளது. ஆகையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/74&oldid=1285996" இலிருந்து மீள்விக்கப்பட்டது