பக்கம்:கன்னித் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் உருவான கதை 6?

அந்த இரண்டையும் ஆராய்ந்தாராம். முதலில் பேச்சு வழக்கைத்தான் ஆராய்ந்தார். அவற்றுக்குள்ளே புகுந்து எழுத்து முதலிய மூன்று பகுதிகளையும் ஆராய்ச்சி செய்தார்.

தமிழ் நாட்டைத் தொல்காப்பியர் ஒரு சுற்றுச் சுற்றி வந்திருக்க வேண்டும். அங்கங்கே மக்கள் பேசும் பேச்சுவழக்கைக் கவனித்தார். புலவர்களோடு பழகி அவர்களிடம் உள்ள பழைய நூல்களையும் புதிய நூல்களையும் வாங்கிப் படித்தார்.

இப்போது பெரும்பான்மையோருடைய தமிழா கிய வழக்குத் தமிழையும், சிறுபான்மையோர் தமிழாகிய செய்யுள் தமிழையும் கரைகண்டவராகிவிட்டார் தொல் காப்பியர். இலக்கணம் இயற்றுவதென்றால் எளிய காரியமா?

இந்த ஆராய்ச்சியோடு தொல்காப்பியர் நிற்க வில்லை. அவர் காலத்துக்கு முன்னே இலக்கணங்கள் சில இருந்தன. அவற்றையும் தேடித் தொகுத்தார். அவற்றை ஆராய்ந்தார். இப்போது ஒருவகையாகத் தமிழின் உருவம் அவர் உள்ளத்தில் வந்து விட்டது. வழக்கு செய்யுள், பழைய இலக்கணம் ஆகிய மூன்று வழியிலும் உணர்ந்தவற்றை உள்ளத்தில் சேர்த்துக் குவித்தார். ஆறுதலாக அமர் ந் து சிந்திக்கத் தொடங்கினர். எழுத்துச் சம்பந்தமான செய்திகள் இவை, சொல்லோடு தொடர்புடைய இலக்கணங்கள் இவை, பொருளைப்பற்றியவை இவை என்று பிரித்துக் கொண்டார். - .

இந்தக் காலத்தில் ‘சாஸ்திரீய ஆராய்ச்சி என்று அடிக்கடி ஒரு தொடர் நம் காதில் விழுகிறது. ஒன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/75&oldid=613367" இலிருந்து மீள்விக்கப்பட்டது