பக்கம்:கன்னித் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

கன்னித் தமிழ்


றைப்பற்றி ஆராய வேண்டுமானல் அது சம்பந்தமாக உள்ளவற்றை யெல்லாம் தொகுக்க வேண்டும்; பின்பு அவற்றை ஒழுங்குபடுத்தி இன்ன இன்ன பகுதியிலே இவை அடங்கும் என்று வகுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வகையிலும் புகுந்து அறிவுக்குப் பொருந் தும் வகையில் ஆராய வேண்டும். இப்படி ஒழுங்காக, குழப்பம் இன்றி ஆராய்வதைச் சாஸ்திரீய ஆராய்ச்சி (Scientific Research) STsirpi sugpËGśgissir. Gārsi) காப்பியர் அத்தகைய ஆராய்ச்சியைத்தான் செய் திருக்க வேண்டும். - -

தொகுத்த செய்திகளை வகுத்து முறைப்பட எண்ணி, நூலை இயற்றத் தொடங்கினர். ஒன்றைேடு ஒன்று கலவாமல் வேறு பிரித்து இலக்கணங்களைச் சொன்னர். ஐந்திர வியாகரணத்தில் அவருக்கு இருந்த புலமை, இலக்கண நூலை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியது.

சிரமப்பட்டுத் தொகுத்த செய்திகளை அறிவிஞல் ‘வகைப்படுத்தினர். ஆற அமர இருந்து நூலை இயற்றி ஞர். இன்று அவர் படித்த இலக்கணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் காலத்தில் வழங்கிய இலக்கியங் களும் மறைந்தன. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன்’ என்று அவரைப் பாராட்டுகிறார் பனம்பாரனர். அந்த ஐந்திரங்கூட இல்லாமற் போயிற்று. ஆனல் அவற்றை நன்கு ஆராய்ந்து அறிவுத் திறத்தாலும் தவச் சிறப்பாலும் நூல் செய்த தொல்காப்பியருடைய தொல்காப்பியம் மட்டும் இன்றும் நிலவுகிறது. அவர் பட்ட சிரமம் வீண் போகவில்லை. அவர் தவத்திறமும் அறிவாற்றலும் அவருடைய நூலை மலைபோல நிற்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/76&oldid=1285997" இலிருந்து மீள்விக்கப்பட்டது