பக்கம்:கன்னித் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ழ கி ன் வ ைக

இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அதிகமாகக் கதைகளைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு மிகுதியாகச் சிறு கதைகள் தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. உல கத்திலேயே சிறு கதை புதிய இலக்கிய வகையாக விளங்குகிறது. இப்பொழுது தமிழ் நாட்டில் சிறு கதை எழுதாத எழுத்தாளர் அரியர். சிறு கதை வராத பத்திரிகையும் இல்லை. -

நாலு வாக்கியங்களை எழுதக் கற்றுக்கொண்ட இளைஞர்கள் சிறு கதை எழுத உட்கார்ந்து விடுகின்ற னர். ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்புகின்ற னர். அது திரும்பி வந்தால் வேறொரு பத்திரிகைக்கு அனுப்பிப் பார்க்கிறார்கள். ‘யார் யார் கதைகளையோ போடுகிறார்கள். நம் கதையைப் போடமாட்டோம் என் கிறார்கள். எல்லாம் தயவு தாகூரிணியத்தில் நடக்கிற வேலையே ஒழிய மதிப்பறிந்து பத்திரிகை போடுவ தாகத் தோன்றவில்லை’ என்று தமக்கு உண்டான சலிப்பில் முடிவுகட்டி விடுகிறார்கள்.

அந்த இளைஞர்கள் சற்றுக் கதைகள் எழுதிப் பழகிய எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்துத் தம் கதை யைக் காட்டினல் அதில் உள்ள குறையை உணர்ந்து கொள்ளலாம். சிறு கதை சிறு கதையாவதற்கு ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/78&oldid=613376" இலிருந்து மீள்விக்கப்பட்டது