பக்கம்:கன்னித் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கன்னித் தமிழ்


றும், குணம் இது என்றும் சொல்கிருேம். ஆராய்ச்சி யில் வேறு பிரிக்கிருேமே அல்லது பொருள் வேறு, பண்பு வேருக வெட்டுவதில்லை.

ஒர் அழகியிருக்கிருள். “தாமரைமலர் போன்ற முகத்தில் முல்லை யரும்பு போன்ற நகை முகிழ்க்கை யில் தோன்றும் எழில் வெள்ளத்திற்குக் கரை போடு வார் யார்?’ என்று ஒருவர் சொல்கிறார். அந்தப் பெண் னின் அழகிலே அவர் ஈடுபட்டவர் என்பதை அவர் பேச்சே வெளியிடுகிறது. அவர் தாம் அநுபவித்த காட்சியை வார்த்தைகளால் சொல்லும்போது முகத்தை யும், நகையையும், எழிலையும் வேறு வேருக்கிச் சொல் கிறார். அப்படிச் சொல்வதல்ை அவற்றை அந்த லாவண்ய உருவத்திலிருந்து பிய்த்தெடுத்துக் காட்ட வில்லை. பொருளை அப்படியே முழுமையாக அநுபவித் ததில் ஒளரவுதான் இன்பம் உண்டு. தனித் தனியே விரிந்த நிலையில் அழகுப் பகுதிகளை ஆராயும்போது அவருடைய ரசாநுபவம் விரிகிறது. அதைத் தனித் தனியே பிரித்துச் சொல்கிறார் அழகியின் அழகைப் பல பகுதிகளாக்கிச் சொல்கிறார். அவர் அவளுடைய லட் சனத்தைப்பற்றியே சொல்கிறார்; அவளைப்பற்றிச் சொல்லவில்லை; “அவள் என் மனைவி; இன்னுர் மகள்; அவள் பெயர் இன்னது என்று சொல்லவில்லை. பொருளாகிய அழகியின் இலக்கணமாகிய அழகைப் பற்றி அவர் சொல்கிறார். அவர் சொல்லும் இலக் கணம் நமக்கு இனிமையாகத்தான் தோன்றுகிறது.

தமிழ் மகளின் அழகை இலக்கண நூலாசிரியர் கள் சொல்லுகிறார்கள். அழகு ‘ என்ற பொருளை யுடைய ‘லட்சணம்’ என்னும் சொல்லே, “இலக்கணம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/80&oldid=1285998" இலிருந்து மீள்விக்கப்பட்டது