பக்கம்:கன்னித் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் வகை 73

என வழங்குகிறது. பழைய காலத்தில் இலக்கணம்

என்று சொல்வதில்லை. இயல் என்றும் மரபு என்றும்

சொல்லி வந்தார்கள். இயல் என்பது இயல்பு, பண்பு என்னும் பொருளைக் கொண்டது. மரபு என்பது சம்பிரதாயம் என்ற பொருளை உடையது.

தமிழ் மகளின் இயல்பாகிய அழகைப் பழைய காலமுதல் புலவர்கள் எவ்வாறு கண்டு ரசித்தனர் என்பதையே இலக்கணம் சொல்கின்றது.

அழகைப்பற்றிக் கூறும் நூல் இலக்கணம் என் னும்போது நண்பர்கள் சிரிக்கிறார்கள். ‘இலக்கணமா அழகைப்பற்றிய நூல்? வெகு அழகுதான்’ என்று ஏளனம் செய்கிறார்கள். ‘அழகையுடைய அழகியினிடம் எனக்குக் காதல் உண்டு. ஆனல் அவளுடைய அழ கைப்பற்றி எனக்குக் கவலை இல்லை’ என்று சொல்கிறார் கள். உண்மையில் அவர்களுக்கு அந்த அழகியிடம் காதல் இருந்தால் அவள் அழகைப்பற்றிய செய்தி யிலும் விருப்பம் இருக்கும். ஒன்று, அவர்களுடைய காதல் போலிக் காதலாக இருக்க வேண்டும்; அல்லது அழகைப்பற்றிய அந்த விவரணம் போலியாக இருக்க வேண்டும். எது போலி என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? -

இப்போது ஆங்கிலக் கல்வியின் பயனுக இலக்கிய விமரிசனம், கவிதை ஆராய்ச்சி என்ற துறைகள் வந் திருக்கின்றன. அவற்றிலே தமிழ் அன்பர்கள் ஈடுபடு. கிறார்கள். கம்ப ராமாயணத்தை நேரே படிக்க அஞ்சு கிறார்கள். ஆனல் கம்ப ராமாயணத்தைப் பற்றிய விமரிசனங்களை ரசிக்கிறார்கள். இந்தத் திறத்தில் பொருளைவிடப் பொருளின் பண்பைச் -சிந்திப்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/81&oldid=613389" இலிருந்து மீள்விக்கப்பட்டது