பக்கம்:கன்னித் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

கன்னித் தமிழ்


ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அந்த விமரிசனம் என்பது என்ன? அதுவும் இலக்கணந்தான்.

எழுத்திலக்கணம் முதலியவை மிகவும் நுணுகி துணுகிச் சொல்லும் விமரிசனமாக இருப்பதனுல், அதற்குமுன் கடக்க வேண்டிய பல படிகளைத் தாண் டாமல் அங்கே வந்தால் கஷ்டமாக இருக்கிறது. இக்காலத்தில் இலக்கணம் என்றால் அருவருப்பு உண்டாவதற்கு அதுவே காரணம்.

மரத்தைக் காண்பதற்கே யோசிக்கிருேம். மரத்தை அதன் அழகிய தோற்றத்தினுல் ஒரு விதமாகப் பார்த் தாலும், மேலே கிளை யாராய்ச்சியும், கொம்பு ஆராய்ச்சி யும் நிகழ்த்தப் பொறுமை இருப்பதில்லை. மொழியின் இலக்கணத்தை ஆராயும் விஞ்ஞானிகளாகிய புலவர் கள் கொம்புக்கும் போயிருக்கிறார்கள். அதற்கு மேலும் இலை, நரம்பு முதலிய பகுதிகளையும் ஆராய்ந்திருக் கிறார்கள். -

பெரும்பாலும், இலக்கணம் என்றால் எழுத்தையும் சொல்லையும் ஆராய்வதோடு நின்றுவிடும். இது பிற பாஷைகளில் வழக்கம். தமிழில் பொருள் ஆராய்ச்சி யையும் மொழியிலக்கண வரம்புக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து, சொல் என்ற சப்த உறுப்புக்களோடு நின்று விடுவதனால் வியாகரணத் துக்கு வட மொழியில் சப்த சாஸ்திரம் என்ற பெயர் வழங்குகிறது. அந்தப் பெயர் தமிழ் இலக்கணத்துக் குப் பொருந்தாது. சப்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி யோடு சப்தத்தாற் குறிக்கப் பெறும் அர்த்தமாகிய பொருளைப்பற்றியும் தமிழ் இலக்கணம் ஆராய்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/82&oldid=1285999" இலிருந்து மீள்விக்கப்பட்டது