பக்கம்:கன்னித் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் வகை 75.

மொழி விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற தொல் காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார். அந்த மூன்று பகுதி’ களிலும் பல கிளைகள் உண்டு. அவற்றின் அமைதியும் பெயர்களும் மிகப் பழங்காலந் தொட்டே தமிழில் வழங்கி வருகின்றன. தொல்காப்பியர் புதிய பெயர்களை அமைக்கவில்லை. ஆலுைம் அவற்றை வகுத்துச் சொல்லும் முறைவைப்பிலும் விரிவாகச் சொல்ல வேண்டிய செய்திகளிலுமே அவர் தம் சொந்த அறிவைப் பயன்படுத்தினர்.

பழைய காலந் தொடங்கி இலக்கண மரபுகள் இருந்தன என்பதற்கு அவர் தம் நூலில் அங்கங்கே, “என்று புலவர்கள் சொல்வார்கள்’ என்னும் பொருள் பட என்ப’, ‘என்மனர்’ என்னும் சொற்களை வழங்கு வதே தக்க சாட்சியாகும்.

தொல்காப்பியத்தில் ஆரம்பச் சூத்திரத்திலே இந்த “என்ப” வருகின்றது.

எழுத்தெனப் படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்ப.து என்ப

என்பது முதல் சூத்திரம். இது எழுத்திலக்கணத் தைச் சொல்லும் எழுத்ததிகாரத்தின் முதலில் வருவது.

அடுத்தபடியாகச் சொல்லின் இலக்கணத்தைச் சொல்வது சொல்லதிகாரம். அங்கும் முதலில், பழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/83&oldid=613396" இலிருந்து மீள்விக்கப்பட்டது