பக்கம்:கன்னித் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கன்னித் தமிழ்


புலவர்கள் இவ்வாறு கூறுவார்கள்’ என்று ஆரம் பிக்கிறார். r

உயர்திணை என்மகுர் மக்கட் சுட்டே

அஃறிணை என்மஞர் அவரஸ் பிறவே என்பது ஆரம்பச் சூத்திரம்.

பொருளிலக்கணத்தை விரிப்பது பொருள் அதி

காரம். அங்கும் பண்டையோர் நெறி இது என்பதை மறவாமல் சொல்லுகிறார்.

கைக்கிளே முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதின என்ப

என்பது பொருளதிகாரத்தின் முதற் சூத்திரம்.

இவையன்றி அங்கங்கே, “புலவர்கள் இவ்வாறு சொல்வார்கள்’ என்று குறிக்கும் சூத்திரங்கள் பல. இத்தனையும், தொல்காப்பியர் தான்தோன்றித் தம்பி ரானுக நூல் இயற்றியவர் அல்லர் என்பதையும், பழைய மரபையும் நூல்களையும் ஆராய்ந்தவர் என் பதையும் தெளிவாக்கும்.

தொல்காப்பியம் எழுத் ததிகாரம், சொல்லதிகாரம்” பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.

ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது சிறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை இயல் என்று சொல்வர். இலக்கணச் செய்திகள் இப்படி ஒன்பது இயல் என்ற கட்டுப்பாட்டில் அடங்குமா?’ என்ற கேள்வி எழலாம். இலக்கணச் சூத்திரங்கள் மனனம் செய்வதற்குரியன என்பது அக்காலத்தார் கொள்கை. ஒரு வரையறை இருந்தால் எளிதில் மனனம் செய்யலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/84&oldid=1286000" இலிருந்து மீள்விக்கப்பட்டது