பக்கம்:கன்னித் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் வகை 77.

மென்பது கருதியே ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

மொத்தம் 1610 சூத்திரங்கள் அடங்கிய நூல் தொல்காப்பியம்: 27 இயல்களும் மூன்று அதிகாரங் களும் அமைந்தது. .

இந்த அரிய பெரிய இலக்கண நூலுக்கு அவ்வக் காலத்தில் இருந்த புலவர்கள் உரை எழுதினர்கள். பழைய உரை இருந்தாலும் தம்முடைய காலத்துக்கு விளக்கம் போதாதென்று கருதிப் பின்னே வந்த புலவர்கள் புதிய உரைகளை எழுதினர்கள். மிகப் பழங்காலத்தில் வழங்கிய உரைகளைப்பற்றிய செய்தி கள் நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கும் உரைகளுள் பழையது இளம்பூரணர் உரை. அவர் மூன்று அதிகாரத்துக்கும் உரை எழுதியிருக்கிறார்.

அவருக்குப் பின் பேராசிரியர் என்பவர் நூல் முழுவதுக்கும் உரை வகுத்தார். அது முழுவதும் இப் போது கிடைக்கவில்லை; சில சில பகுதிகளே கிடைத் திருக்கின்றன. அவருக்குப்பின் நச்சினுர்க்கினியர் தொல் காப்பியம் முழுவதற்கும் உரை எழுதினர். அவர் உரையிலும் பொருளதிகாரத்தின் பெரும் பகுதிக்கு உரியது இப்போது கிடைக்கவில்லை. -

சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் தனியே சில புலவர்கள் உரை எழுதியிருக்கின்றனர். சேனுவரையர் என்பவர் எழுதிய உரை புலவர்களால் விரும்பிப் படிக்கப்பெறுவது. கல்லாடர், தெய்வச்சிலையார் என்ற இருவருடைய உரைகளும் உண்டு. இவற்றையன்றி வேறு சில உரைகளும் வழங்கி வந்திருக்க வேண்டு மென்று தெரிகிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/85&oldid=613403" இலிருந்து மீள்விக்கப்பட்டது