பக்கம்:கன்னித் தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணமும் சரித்திரமும்

தமிழருடைய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதற் குரிய சாதனங்கள் பல. சமீபகாலச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளப் பல கருவிகள் உதவுகின்றன. எந்தக் கருவியும் கிடைக்காமல் வெறும் ஊகத்தினுல், “தமிழர் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று எண்ணும் காலத்தைச் சரித்திர காலத்துக்கு முற்பட்டது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வது வழக்கம்.

சரித்திர காலத்துக்கு முற்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் சில கருவிகள் உண்டு. வாழ்க்கையைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவு தெரிந்துகொள்ள அக் கருவிகள் உதவும். அத்தகைய கருவிகளுள் நூல் ஒன்று. .

மணிமேகலை என்ற நூலைக் கடைச் சங்கம் ஓய்ந்து போன காலத்தில் எழுந்ததென்று சொல்வார்கள். கி. பி. இரண்டாவது நூற்றண்டு என்று ஒரு சாராரும், கி. பி. ஐந்தாவது நூற்றாண்டென்று வேறொரு சாரா ரும் கூறுவர். அது எப்படியானலும் மணிமேகலை உண்டான காலத்துத் தமிழர் வாழ்க்கையை ஓரளவு அந்த நூலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்தக் காவியத்தில் ஓரிடத்தில், மணிமேகலை ஒரு கண்ணுடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/87&oldid=613413" இலிருந்து மீள்விக்கப்பட்டது