பக்கம்:கன்னித் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கன்னித் தமிழ்


அறைக்குள் புகுந்து கொண்டாள் என்றும், அவள் இயங்குவது வெளியில் தெரிந்ததேயன்றி அவள் பேசிய பேச்சுப் புறத்தே கேட்கவில்லை யென்றும் புல வர் பாடியிருக்கிறார். கண்ணுடியினூடே ஒளி செல்லும், ஒலி செல்லாது என்ற உண்மையை அக்காலத்தில் தமிழர் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரம். இப்படிக் கதைக்குப் புறம்பாகத் தமிழர் வாழ்க்கைப் பகுதிகளைத் தெரிந்து கொள்ளப் பழந் தமிழ் நூல்கள் உதவுகின்றன. -

தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு உரிய இலக்க ணத்தை வகுப்பது. அதைப் படிப்பவர்கள் இலக்கணத் தைத் தெரிந்து கொள்வதற்காகவே படிக்கிறார்கள். ஆனால், அதை வேறு ஒரு பயன் கருதியும் படிக்கலாம். தமிழர் வாழ்க்கையைப் பற்றி என்ன என்ன செய்தி களைத் தொல்காப்பியர் இடையிடையே தெரிவிக்கிறார் என்ற ஆராய்ச்சியை நடத்தலாம். தொல்காப்பியம் எவ்வளவுக்கு எவ்வளவு பழையதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ஆராய்ச்சிக்கு மதிப்பு உண்டு. ஒரு கால் தொல்காப்பியத்திலுள்ள இலக்கணச் செய்திகள் அவ்வளவும் மாறி அந்நூல் இலக்கண நூல் என்ற வகையில் பயனின்றிப் போய்விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது கூடத் தமிழர் சரித்திரப் பகுதிகளை உணரும் கருவியாக அது இருக்கும்.

எழுத்தின் இயல்பு, எழுத்துக்களின் வகை, எழுத் துக்கள் ஒன்றாேடு ஒன்று சேரும் புணர்ச்சி முதலிய வற்றைத் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் சொல் கிறார். ஒலி எப்படிப் பிறக்கிறது, வெவ்வேறு ஒலியாக எப்படி அமைகிறது முதலிய தத்துவங்களைச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/88&oldid=1286002" இலிருந்து மீள்விக்கப்பட்டது