பக்கம்:கன்னித் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணமும் சரித்திரமும், 81.

கிறார், வார்த்தையும் வார்த்தையும் நெருங்கும்போது முன்னுள்ள சொல்லின் கடைசி எழுத்தும், பின்னுள்ள தன் முதலெழுத்தும் சேரும். அதைப் புணர்ச்சி என்பார்கள். இப்படிச் சேரும்பொழுது இடையே சில மாறுபாடுகள் உண்டாகும். அவற்றை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். நிற்கிற எழுத்து வேருென்றாக மாறும்; அது மறைந்துபோவதும் உண்டு; அல்லது புதிய எழுத்துத் தோன்றும். இந்த மாறுபாட்டைத் திரிபு என்றும், விகாரம் என்றும் இலக்கணக்காரர் சொல்வர். - -

இந்த விகாரம், நிற்கிற சொல்லையும், வரும் சொல்லையும் பொறுத்த ஒன்று. இன்ன சொல்லுக்கு முன்னுல் இன்ன சொல் வந்தால் இத்தகைய விகாரம் உண்டாகும் என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார்; அத்தகைய இடங்களில் பல சொற்களை அவர் எடுத்துச் சொல்கிறார். அவர் சொல்லும் விகாரத்தைப் பற்றிய செய்தி இலக்கணம். ஆளுல் அவர் எடுத்துக் காட்டும் சொல்லோ நம்முடைய ஆராய்ச்சிக்கு உதவுவது. -

“தாழ் என்ற சொல்லும் கோல் என்ற சொல்லும் ஒன்று சேர்ந்தால் தாழக்கோல் என்று வரும்’ என்று ஒரு சூத்திரம் இருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் ‘அ’ என்ற எழுத்து இடையே புதிதாக வருவதைச் சொல்கிறார் . அது தமிழ் இலக்க ணம் படிப்பவர்களுக்கு உபயோகமான செய்தி. தமிழர் சரித்திரம் படிப்பவர்களுக்கு இந்தச் சூத்திரத்தில் ஓர் அரிய செய்தி உண்டு. தொல்காப்பியர் காலத்தில் “தாழக்கோல் என்ற கருவி இருந்தது என்ற செய் தியை இந்தச் சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/89&oldid=613423" இலிருந்து மீள்விக்கப்பட்டது