பக்கம்:கன்னித் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

கன்னித் தமிழ்


கொள்ளலாமே! அது மட்டுமா? தாழ் என்ற பொருள் ஒன்றும், அதைத் திறக்கும் கோல் என்பது ஒன்றும் உண்டு என்றும் தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்குக் கதவும் அந்தக் கதவுக்குத் தாழும் இருந்தன. வெளி யிலே செல்கிறவர்கள் ஒரு கோலில்ை உள்ளே உள்ள தாழைத் திருப்பி விடுவார்கள்; திறப்பார்கள். தாழைத் திறப்பதனால் தாழக்கோல் என்ற பெயர் வந்தது. வெளியிலே நாதாங்கியில் பூட்டை மாட்டிப் பூட்டுவது பழந் தமிழருக்குத் தெரியாது என்று மேலும் அந்த ஆராய்ச்சியை விரித்துக்கொண்டுபோக இடம் உண்டு.

இந்த முறையில் தொல்காப்பியத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய துப்புக்கள் இன்னவென்று சற்றே கவனிக்கலாம்.

முதலில் எழுத்ததிகாரத்தின் ஆரம்பத்தில் நூல் மரபு என்ற அத்தியாயம் இருக்கிறது. அதில் எழுத் துக்களின் பெயர்கள், அவற்றின் பிரிவுகள், அவற்றின் ஓசை முதலிய செய்திகள் வருகின்றன. பிறகு மொழிமரபு என்ற அத்தியாயம் வருகிறது. அதில், எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாவதையும், அப் பொழுது சில எழுத்துக்களுக்கு உண்டாகும் விசித்திர மான மாறுபாடுகளையும் சொல்கிறார் அடுத்த அத்தி யாயமாகிய பிறப்பியலில் எழுத்தை உச்சரிக்கும்போது எந்த எந்த உறுப்புகள் எப்படி எப்படி வேலை செய் கின்றன என்பதைச் சொல்கிறார். அதற்குப்பின் வரும் ஆறு அத்தியாயங்களில் புணர்ச்சியைப் பற்றிய செய்தி கள் வருகின்றன. 2,

இந்தக் காலத்தில் நாம் மெய்யெழுத்துக்களுக்கு மாத்திரம் புள்ளி வைக்கிருேம். பழங்காலத்தில் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/90&oldid=1286003" இலிருந்து மீள்விக்கப்பட்டது