பக்கம்:கன்னித் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணமும் சரித்திரமும் 83

சில எழுத்துக்களுக்கும் மேலே புள்ளி வைத்தார்கள் என்று தெரிகிறது. இப்போது ஏ, ஓ என்று எழுதும் எழுத்துக்களின் உருவம் புதியது. முன்பெல்லாம் ‘எ’ என்று எழுதினால் ஏ என்றுதான் வாசிப்பார்கள், ஒ என்பது ஒகாரத்தையும் கொ என்பது கோ என்பதை யும் குறித்தன. எ என்ற எழுத்தின்மேலே ஒரு புள்ளி வைத்தால் அப்போதுதான் அதை எகரமாகப் படிப் பார்கள். வீரமாமுனிவர் என்ற மேல் நாட்டுப் புலவர் இந்த நாட்டுக்கு வந்து தமிழ் பயின்றார்; நூல்களை இயற்றினர். அவரே எ என்ற எழுத்துக்குக் கீழே ஒரு சிறிய கோடு இழுத்து ஏ ஆக்கினர். ஒகரத்தின் கீழ்ப் பாகத்தைச் சுழித்து ஒ என்ற எழுத்தை அமைத் தார். கெ என்பதன் கொம்பையும் கொ என்பதன் கொம்பையும் மாற்றி, கே என்றும் கோ என்றும் ஆக்கி ஞர். இப்படி உருவம் மாறியது முதல் எகர ஒகரங் களுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் நின்று போயிற்று.

இப்படியே குற்றியலுகரம் குற்றியலிகரம் என்ற இருவகை எழுத்துக்களுக்கும் முற்காலத்தில் புள்ளி போட்டார்கள். ஓசை குறைந்த ‘ம்’ என்ற எழுத்துக்கு உள்ளே ஒரு புள்ளியை வைத்தார்கள். அதற்கு மகரக் குறுக்கம் என்று பெயர். .

உலக வாழ்க்கையில் எல்லாப் பிராணிகளும் உயி ரோடும் உடலோடும் கூடி இயங்குகின்றன. எழுத்தி லும் உயிர் உண்டு; உடலுண்டு. உயிர் உடலோடு சேர்ந்து இயங்கும்; தானே தனியாகவும் இயங்கும். மெய் உயிரோடு சேராமல் இயங்காது. உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று எழுத்துக்களில் இரண்டு வகை இருக்கின்றன. உயிரெழுத்தின் தொடர்பே இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/91&oldid=613431" இலிருந்து மீள்விக்கப்பட்டது