பக்கம்:கன்னித் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கன்னித் தமிழ்


மல் மெய்யை உச்சரிக்க முடியாது; சொல்லாக்கவும் முடியாது. உயிர் தனியாக நிற்கும். -

உயிரெழுத்துக்களில் குறில் என்றும் நெடில் என் றும் பிரித்திருக்கிறார்கள். ஒசையின் அளவைக்கொண்டு பிரித்த பிரிவு இது. மெய் எழுத்திலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற பிரிவு இருக்கிறது. - ஓசையின் இயல்பைக் கொண்டு பிரித்த பிரிவு இது.

எழுத்து, வாயிலிருந்து வெளியாகும்போது அதன் ஒலி காதுக்குக் கேட்கிறது. அந்த ஒலி வாயிலிருந்து எழுவதற்கு முன்னலே பல பல காரியங்கள் உடம் பிலே நிகழ்கின்றன. நம்முடைய நாபியில் உதானன் . என்ற காற்று அடங்கி யிருக்கிறது. நாம் பேசத் தொடங்கும்போது, முதலில் உந்தியில் வேலை ஆரம்ப மாகிறது. உதானன் என்ற வாயு எழும்பி மேல் நோக் கிப் புறப்படுகிறது. நேரே செல்லும் அந்த வாயு ஒரே மாதிரி வெளியாவதில்லை. நாம் ஒலிக்கின்ற எழுத்தின் அமைப்புக்கு ஏற்ப வேறு வேறு முறையில் வெளியா கிறது. அதற்கு முக்கியமாக மூன்று திருப்பங்கள் இருக்கின்றன. தலை ஒரு திருப்பம் ; கழுத்து ஒன்று; மார்பு ஒன்று. தலைக்கு வந்த வாயு அங்கிருந்து வாய் வழியாகப் புறப்படும்போது பல், இதழ், நாக்கு, மூக்கு என்ற கருவிகளால் வெவ்வேறு ஓசையை உண்டாக்கு கிறது. முக்கு வழியாகவந்தால் ங், ஞ, ண, ந, ம, ன என்ற மெல்லின ஒலியை உண்டாக்குகிறது. இப் படியே மற்ற எழுத்துக்கள் வெவ்வேறு வகையான முயற்சிகளால் ஒலி வேறுபாட்டை அடைகின்றன.

இவற்றை விரிவாகத் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார். இதை அவராகச் சொல்லவில்லை. அவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/92&oldid=1286004" இலிருந்து மீள்விக்கப்பட்டது