பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலை செய்கின்றவர்கள் சிறிய ஒலைக் கூரை ஒன்றை வேய்ந்திருந்தனர். கோவிலின் வேலை முடிந்த பிற்பாடும் அந்த ஒலைக் குடில் பிரிக்கப்படாமலேயே இருந்தது. அம்மா தம் வாழ்விடத்தைக் கிழக்கு மண்டபத்தி லிருந்து ஒலைக் குடிலுக்கு மாற்றிக் கொண்டார். தேவசத் தகர் அம்மா அதில் நிரந்தரமாக இருந்துவிட்டால் அது தனியார் சொத்தாகி விடும் என்று எண் ணி ஓலைக் கூசை யைப் பிரித்து விட்டனர், அம்மாவின் நிலை பழையபடி ஆனது. முகப்புத் திண்ணை வாழ்விடமானது. 1975-ல் திரு. இராஜமாணிக்கம் தேவசம் எல்லையி லேயே தன் செலவில் ஒலைக் கூரை ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதில் அம்மா கொஞ்சநாள் இருந்தார். தேவ சத்தார் அதையும் பிரித்து விட்டனர். அப்போது தேவசம் போர்டில் தி. மு. கழக அங்கத் தினர்கள் இருந்தனர். அந்தக் கூரை பிரிக்கப்பட்ட மறு வாரம் போர்டு கலைந்தது. அம்மா பழைய படி ஒட்டுத் திண்ணையை நாடிச் சென் ருர், மாயி பக்தர்களுக்கு அது பொறுக்கவில்லை. எப்படியாவது நிரந்தசமான ஒரு இடத்தை அம்மாவிற்குக் கொடுக்க வேண்டுமே என்று முயற்சி செய்தார்கள். திரு. இராஜமாணிக்கம் அதில் தீவிரமாய் இருந்தார். ஒரு முறை அவர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது தேவசம் போர்டு உயர் அதிகாரி திரு. பால சுப்பிரமணியம் 1. A. S. வந்திருந்தார். திரு. இராஜ மாணிக்கம் அவரைக் கண்டு தன் வேண்டுகோளேச் சொன் னர். அந்த அதிகாரி "ஆகா அம்மாவை எனக்குத் தெரியும். ஞான ஆனந்த சுவாமிகள் சொல்லி இருக் F