பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பாடல்களின் பொருளை ஒருவாறு விளங்க முடியும். ஆளுல் உணர்ந்து கொள்ள வேண்டுமென் ருல் அம்மாவைப் புரிய வேண்டும். அவர் அனுபவ பூர்வமாக புரிய வைப்பார். அம்மாவைப் போன்ற சித்த புருஷர்கள் தமிழ்க் கிராமங்களில் காடுகளில் மலைகளில் வாழ்கின் ருர்கள். சித்தர்களின் வாழ்வை - பாடல்கள் பற்றிய ஆராய்ச்சி யைத் தொடங்கும் மாணவனுக்குக் கள ஆய்வு (field work) தேவை என்ருல், அந்த ஆய்வை மாயம்மாவின் பாதங்களிலிருந்தே தொடங்க வேண்டும். அம்மா சித்த புருவழியாக எங்கோ மலையில், ஆளர வம் இல்லாத வனுந்தரத்தில் வாழ்ந்திருக்க முடியும். ஆணுல் தம் தவம், சக்தி எல்லாவற்றையும் மனம் வருந்தி வந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற காரணத்தின லேயே மனிதரோடு மனிதராய் நிலத்தின் எல்லையில் வாழ்கிருர், அவரிடம் வருகின்றவர்களின் தன்மையைச் சொல் வீ முடியாது. தண்ணிரில் அமர்ந்திருக்கும் வல்லமை பெற் றவர் வருகிருர்; நெருப்பைத் தன் மீது கொட்டி விட்டு எந்த மாற்றமுமின்றி நடப்பவர் வருகின் ருர் ; தேங்காய் களைத் தன் தலையிலேயே அடித்து உடைத்துக் காட்டுப வ வருகின் ருர் , மண்ணை உருட்டி விழுங்குபவர் வ்ரு கின் ருர் , முள் ஆனி மீது மணிக்கணக்காய் நிற்பவர் வருகின் ருர். இப்படி எத்தனையோ பேர்கள் அம்மாவின் அருகே வந்து வணங்கி விட்டுச் செல்கின் ருர்கள். கருமமே கண் ணுகத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் அம்மாவின் அருகில் செல்வர்கள், ஏழைகள், பணம் வேண்டியவர், மகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று எண்ணி ஏங்கி நிற்பவர், புதிய தொழிலை ஆசம் பிக்க ஆசீர்வாதம் வேண்டியவர் இப்படி எத்தனை எத் தளையோ பேர் வருகின்றனர்.