பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 5– கொள்ள இயற்றியிருந்த அறுபத்து நான்கு மூலிகைப் பலகைகளால் ஆகிய கட்டிலையும், அவரும் அவர் குடும் பத்தினரும் வாழ்ந்த இடங்களை யும், நடந்த நடைகளையும் மகிழ்ந்த வாவியையும் கண் குளிரக் கண்டோம். இதன் பின் திரு சுந்தர ராமசுவாமி அவர்கள் எங்களை கன்னியாகுமரி போகும் வழியில் நெடுஞ்சாலை ஓரத்தி லேயே இருக்கும் பொற்றையடிச் சுவாமிகள் என்பவரைக் காண அழைத்துச் சென்ருர். இந்தச் சுவாமிகளை இரண் டாம் முறையாக இம்முறைப் பார்த்தேன். வன்சொல்லும் வன் செயல் பாவனையும் நிறைந்த இவரைப் பற்றித் தனிக் கட்டுரையில் தான் எழுதவேண்டும். பொற்றயடி சுவாமிகளைப் பார்த்த பின்பு கன்னியா குமரிக்கும் போய் வந்து விடலாமே என்று திரு. கந்தா ராமசாமி சொன் னபோது முன் தினம் இந்தமுறை மாயி யைப் பார்க்க நேரம் கிடைக்காது போல இருக்கிறதே' என்று ஏங்கிய எங்களுக்கு எதிர்பாரா இன்பம் ஏற்பட்டது. திரு. சுந்தர ராமசாமியின் விருந்தோம்பும் மருந்துப்பண் பை வாயார வாழ்த்திக் கொண்டே காரில் ஏறிளுேம், சில மணித்துளிகளில் கன்னியாகுமரி சேர்ந்தோம். சிற்றுண்டிச் சாலையில் மாயிக்குத் தருவதாகப் பலகாரப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மாயியின் குடிசையை நோக்கி வாயு வேகமாக நடந்தோம். அங்கே காங்கள் கண்டகாட்சி எங்களை ஏதோ ஒரு தனி உலகத்திற்கே இழுத்துச் சென்றது. சுற்றியிருந்த கடலையும் சுடர் விட்டிருந்த கட்டடங்க ளை யும், கோயில்கள்ை யும் மணிமண்டபங்களையும் கண்களும் கான மறந்தன. குத்துக்கால் வைத்துக் கொண்டு மாயி உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிப் பத்துபேர் சூழ்ந்திருந்தார்கள். எதிரே ஏராளமான விறகுக் கட்டை களைப் போட்டுப் பெருந் தீ மூட்டப் பட்டிருந்தது. ஒரு