பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கன்பூசியஸின்

என்னிடம் யாரும், எதுவும் கேட்கக் கூடாது என்று அவர் உயிருடன் நாட்டில் ஞான உலா வந்தபோது கேள்வி கேட்டவர்களை எல்லாம் திட்டவட்டமாகக் கண்டித்தது மட்டுமல்ல; வழிகாட்டியாகவும் விளங்கியவர் கன்பூசியஸ்.

பர்ணசாலைகள், ஆசிரமங்கள், பங்களா வாழ்க்கைப் படாடோவங்கள் தேவாலயத் திருக்கோலத் திருமடங்கள் என்பனவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, தனித்தனியாகக் காட்டுக்குப் போவதற்குப் பதிலாகநாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒதுங்கி வாழும் சில துறவிகளைப் பற்றி ஒரு மாணவன் அவரைக் கேட்டபோது; 'நாம் பறவைகளோடும் மிருகங்களோடும் உறவு கொள்ள முடியாது; சகமனிதர்களோடும் சரிசமத்துவமாக உறவு கொள்ள முடியவில்லை என்றால், வேறு யாரோடுதான் நம்மால் உறவு கொள்ள முடியும்' என்று தூயத் துறவுக்கே துறவாடை தந்த தூய நெஞ்சினர் கன்பூசியஸ்!

எந்தெந்த நல்லொழுக்க முறையில் மனிதன் ஏற்றத்தோடு வாழமுடியும் என்பதை எண்ணியெண்ணி, அதற்கான ஒரு சமுதாயத்தையும் நெறிகளையும் உருவாக்கிட அல்லும் பகலும் அயராது உழைத்து அரும்பாடுபட்ட மனிதகுல மாமேதை கன்பூசியஸ்!

'நான் கண்ணியமும் நேர்மையும் மிகுந்த மனிதனாகவே வாழ்ந்திட முயன்றேன். எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் பிறருக்கு சலிக்காமல் எடுத்துக் கூறினேன்' என்று மக்கள் இடையே மார்தட்டித் தைரியத்தோடு கூறியவர் கன்பூசியஸ்!

'மக்கள் என்றால், துன்பமும் வேதனையும்படுபவர்கள்; அல்லல் வாழ்விலே அவதிப்படுபவர்கள்; இப்படிப் பட்டவர்களோடுதான் நான் சேர்ந்து வாழ வேண்டியவனாக உள்ளேன்! நாடெங்கும் இவ்வாறு மண்டிக்கிடக்-