பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71

துக் கொள்’ என்று கேட்டுக் கொண்டான். அடுத்த ஆண்டு கன்பூசியஸ் 'யெய்' அரசுக்குச் சென்றபோது, நல்ல முறையில் நடந்து வரும் ஓர் அரசின் முக்கிய அம்சம் என்ன? என்று கேட்டான்.

'தன்னுடைய ஆட்சியில் இருக்கும் மக்களின் தன்னம்பிக்கையைப் பெறுவது; வேற்று நாட்டு மக்களின் நேச உறவைப் பெறுவது; இவை நல்ல ஆட்சியின் அம்சங்களாகும் என்று கன்பூசியஸ் பதில் கூறினார்.

'உங்களுடைய கன்பூசியஸ் எப்படிப்பட்டவர்?’ என்று அவரது மாணவனிடம் 'யெய்' சீமான் கேட்டான். சீடன் அதற்குப் பதில் கூறாமல் அந்தக் கேள்வியை அப்படியே குருவிடம் வந்து கூறினான். அப்போது அவர் பதில் கூறும்போது, உண்மையைக் கண்டறிய உழைப்பவன், தனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கு எடுத்துரைப்பவன்; எந்த ஒரு விஷயத்திலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது தனது உணவையும் மறந்திருப்பவன்; முதுமைப்பருவம் வந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பவன்; இவற்றிலே ஈடுபடும்போது சிறிதும் சளைக்காமல் பொறுப்புடன் இருப்பவனும் தான்-கன்பூசியஸ் என்று, அந்தச் சீமானிடம் போய்க்கூறு என்று அவனை அவர் அனுப்பிவைத்தார்!

இதற்குப் பிறகும் பல இடங்களில் கன்பூசியஸ் சுற்றி அலைந்தார். அப்போது, 'பூ' அரசுக்கும் 'சென்' அரசுக்கும் இடையே கடும்போர் மூண்டது. சென் அரசுக்கு உதவி செய்திட 'சூ' அரசு முன்வந்தது. அரசின் சேனை 'செங்பூ' என்ற இடத்தில் முகாமிட்டது. இந்த இரு அரசுகளின் எல்லைகளுக்கிடையில் அப்போது கன்பூசியஸ் பயணம் வந்து கொண்டிருந்தார் 'சூ' அரசினர் அவரை, வரவேற்றிட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்

சென் அரசு மந்திரி, ட்சாய் அரசின் மந்திரியோடு சேர்த்து, சூ அரசுக்குக் கன்பூசியஸ் போவதைத் தடுக்கப்