பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கன்பூசியஸின்


அதற்கு அந்த மாணவன், 'தன்னுடைய கருத்துக்களும்-தத்துவங்களும் மிக உயர்ந்தவை. ஆனால், அதை மக்கள் எளிதில் பின்பற்றுவது கஷ்டம் அதற்காக அதை நாம் போதிப்பதிலேயே நிறுத்திவிடக்கூடாது. பிறரால் அக்கருத்துக்கள் ஏற்கப்படவில்லை என்ற கவலை உங்களுக்கு ஏன்?

மற்றவர்களால் உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற உண்மையே நீங்கள் நேர்மையான மனிதர் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

நாம் பிறர் மனதில் உண்மையான கருத்துக்களை விதைக்கவில்லை என்றால் அது நம்முடைய தவறு. ஆனால், நாம் வித்திட்டும் அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது நமது தவறு அல்ல. அதற்குப் பெறுப்பு ஆட்சி நிர்வாகத்திலே உள்ளவர்களை சேரும்.

உங்கள் கருத்துக்களைப் பிறரால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே தங்களை ஞானியாக்கிவிட்டது என்றான். அதைக் கேட்ட கன்பூசியஸ் சிரித்துக் கொண்டார்.

கன்பூசியல், சூ அரசுக்கு தனது மாணவன் ட்சே குக் என்பவனை அனுப்பினார். அரசரின் ஆட்கள் உடனே வந்து அவரையும், அவரது மாணவர்களையும் விடுவித்துக் கொண்டு போனார்கள்.

அந்த மன்னன் அவருக்கு தர இருந்த நிலங்களை அங்குள்ள அமைச்சன் தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு அந்த அரசன் கி.மு. 489-ம் ஆண்டு மறைந்து விட்டான்.

'வெய்' அரசுக்கு மீண்டும் கன்பூசியஸ் தனது 63வது வயதில் வந்தார். அப்போது அவரது மாணவர்களிலே சிலர், பலவித அரசியல் பதவிகளைப் பெற்று வந்தர்கள் அந்த அரசன கூட அவரது ஆலோசனைகளை வெற்று