பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கன்பூசியஸின்

னோடியாகவும் திகழ்ந்தார் பேரறிஞர் பிளேட்டோ என்ற அரசியல் மகானைப் போல!

கன்பூசியஸ் எங்கு போனாலும், எங்கு வாழ்ந்தாலும், எப்போதும் தன்னுடனே ஒரு மாணவர் குழுவை உடன் வைத்துக் கொண்டிருந்த ஒரு குருகுல ஆசானாவார்! போதிமாதவன் புத்தர் பெருமானைப் போல!

சீன ஞானப் பெருமகன் கன்பூசியஸ், கிறிஸ்து பெரு மகனான இயேசு பெருமான் பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன்னரே, சீன நாட்டில் பாராமுகமாகப் பராமரிக்கப்பட்டு வந்த பெரு நூல்களைத் தொகுத்து நூற்களாக வெளியிட்ட ஒரு பதிப்பாசிரியராகவும் விளங்கினார்.

கன்பூசியசைப் போல தனது நாட்டுச் சான்றோர்களின் இலக்கிய, வரலாற்று, கவிதை நூற்களை எல்லாம் தனது தாய்நாட்டு எதிர்காலத்திற்கான நூற் புதையலைச் சேமித்து, நூற்களாக வெளியிட்ட சிந்தனையாளர்கள், பதிப்பாளர்கள் வேறு எந்த நாட்டிலும் தோன்றியதாக, தமக்குத் தெரிந்தவரை வேறு எவரும் இல்லை என்று மலை மேல் நின்று குரல் ஒலிக்கலாம்; அத்தகைய ஓர் அறிவுச் சேவையை ஏற்று அரும்பாடுபட்ட ஞானமேதை அவர்!

கன்பூசியஸ், தனது வாழ்நாள் வரையிலும், தன்னுடன் இருந்த மாணவமணிகளுக்கு அவ்வப்போது சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், அவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு தக்க விடைகளை விளக்கி அவர்களின் அறியாமைகளை அகற்றிவந்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்துவந்த கல்வி போதகராக இருந்தவராவர்.

கன்பூசியஸ் என்ற மாமேதை தமது நாட்டுக் கம்பர் பெருமானைப் போல கவியுலகச் சக்கரவர்த்தியாக நடமாடிய மாபெரும் கல்விமகான் கவிதைகளைப் பாடியது