பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

5


காற்றினால் சீவி விடப்பட்டிருந்த கூந்தல் சற்றுக் கலைந்து நெற்றியில் அங்குமிங்குமாக அலைந்தது. கறுப்புப் பொட்டு அந்தச் சிவப்புச் சிங்காரியின் நெற்றியிலே வியர்வையில் குழைந்து ஒருபுறம் ஒழுகிவிட்டது. ஆனால், அதுவும் ஒரு தனி அழகாகத்தான் இருந்தது. “மாதே உனக்குச் சோகம் ஆகாதடி” என்று பாட எண்ணினான். சோகித்துச் சாய்ந்திருந்த அந்தச் சொர்ண ரூபியை நோக்கி, ஆஹா! நான் வண்டியை ஓட்டுபவனாகவன்றோ இருக்கிறேன். எனக்கு இவள் கிட்டுவாளா? என்று எண்ணினான். ஏங்கினான். மாடு தள்ளாடி நடந்தது. பரந்தாமனுக்கு அதைத் தட்டி ஓட்ட முடியவில்லை. இஷ்டங்கூட இல்லை. அந்த ரமணி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வண்டியில் இருக்கிறாளோ, அவ்வளவு ஆனந்தம். வண்டியோட்டுகிற வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவம் இருக்கிறதல்லவா, என்றுகூட எண்ணினான்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆறாவது மைலில் மாரிக்குப்பம். அங்கு ஆடி வெள்ளிக்கிழமையிலே குறி சொல்வதும் பிசாசு ஓட்டுவதும் குளிச்சம் கட்டுவதும் முழுக்கு போடுவதும் வழக்கம். சுற்றுப் பக்கத்து ஊரிலிருந்து திரளான கூட்டம் வரும். மாரிக்குப்பம் கோவில் பூசாரி மாடி வீடு கட்டியதும் அவன் மகன் மதராசிலே மளிகைக் கடை வைத்ததும் அந்த மகமாயி தயவாலேதான். எத்தனையோ ஆயிரம் குளிச்சம் கட்டியிருப்பான் பூசாரி. அவனைத் தேடி எத்தனையோ ஆயிரம் பேர் வந்திருப்பார்கள். எவ்வளவோ பேரைப் பார்த்தவன். எத்தனையோ பிசாசை ஓட்டினவன். அந்தப் பேர்வழியைக் காணவும் சாரதாவுக்கு அடிக்கடி வருகிற சோகம், ஏதாவது “காத்து சேஷ்டையாக” இருக்கலாம். அதுபோக ஒரு குளிச்சம் வாங்கிப் போகலாமென்றும்தான் ஐம்பது, அறுபது மைல் தாண்டி அழகாபுரியைவிட்டு வீராசாமிபிள்ளை மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். ஆவணியிலே சாரதா-