பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

75


இருவரும் சமையலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்திவிட்டனர். பின்னர் ராதா மெல்ல நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல. சில நிமிடங்கள் வரை சாரதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி, மெதுவாகக் கணவன் மீது கையை வைத்தாள். பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே, அவர் உடலைப்பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம், மரணம்.

சாரதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே சாரதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.

சாரதா விதவையானாள், பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக்கொண்டான்; ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான் பரந்தாமன். சாரதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? சாரதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.

ஒரு மாதத்துக்குப் பிறகு, பரந்தாமன் சாரதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா!

சாரதா தாலியை இழந்தாள்; பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை