108
கப்பலோட்டிய தமிழன்
சேர்ந்தார். அரவிந்தர் அவரை அன்போடு அணைத்துக் கொண்டார்.
1935-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந் திர பிரசாதர் தூத்துக்குடிக்கு வந்திருந்தபோது, பிள்ளையவர்கள் நோயுற்றிருப்பதாகக் கேள்விப்பட்ட தும், தாமே சிதம்பரனாரின் இல்லஞ் சென்று கண்டு பேசினார். 'சிதம்பரம் பிள்ளை வாழும் தூத்துக்குடிக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் சிறை சென்றதாகப் பத்திரிகைகளில் பார்த்து தேசாபிமான ஆர்வங் கொண்டவர்களில் யானும் ஒருவன்" என்று ராஜேந்திரர் அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத் தில் கூறினார்.
.
பாரதியாரின் சுதந்தரப் பாட்டே சிதம்பரனாரின் காதுகள் கேட்ட கடைசிப் பாட்டு, அவர் தமது படுக்கையைச் சூழ்ந்திருந்த தேச பக்தர்களுக்கே கடைசி வணக்கத்தைச் செலுத்தி விடை பெற்றுக் கொண்டார். ஆம்; சிதம்பரனார் தமது இறுதிக் காலத் திலும் காணவிரும்பியது சுதந்தரம்; கேட்க விரும் பியது பாரதியாரின் பாடல் ; வணங்க விரும்பியது தேசபக்தர்கள் கூட்டம். என்னே அவரது தேச பக்தி!
·
"வெள்ளையரே வெளியேறுங்கள் ' என்று பிற்காலத் தில் நாடு முழுதும் கிளம்பிய கோஷத்திற்கு வித் தூன்றிய முதல் தலைவர் சிதம்பரனாரே என்பதை நீதிபதி பின்ஹேயும், கலெக்டர் விஞ்சும் கூறியிருப் பதைக் கொண்டே அறியலாம். வாழ்க சிதம்பரனார் நாமம்!