இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கப்பலோட்டிய தமிழன்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் அரங்கசாமி என்பவ ஒரு நாள் க்ஷவரஞ் செய்து கொள்ள க்ஷவரத் தொழிலாளி ஒருவரை அழைத்தார்.க்ஷவரஞ் செய்து கொண்டிருந்தபோது அத்தொழிலாளி, ஏன் சாமி! கலெக்டர், போலீஸ் பட்டாளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றபோது நீங்கள் ஆதரவு காட்டியதாக ஊரார் சொல்லிக் கொள்ளுகிறார்களே, அது உண் மையா? என்று கேட்டார்.
"அடே! அதை நீ ஏன் கேட்கிறாய்? அது உன் வேலை யல்ல" என்று அதட்டினார் வழக்கறிஞர்.
"அப்படியானால்,உமக்கு க்ஷவரஞ் செய்வதும் என் வேலையல்ல!" என்று சொல்லிக் கொண்டே கத்தியை மடக்கிப் பெட்டியில் வைத்துக்கொண்டு கடுகி நடந் தார் தொழிலாளி.
பாவம்! வழக்கறிஞர் அரை க்ஷவரத்தோடு அவமானப் பட நேர்ந்தது. எவ்வளவோ கெஞ்சியும் தொழிலாளி திரும்ப வில்லை. வேறு க்ஷவரத் தொழிலாளர்களை அழைத்தார்; ஒருவரும் இணங்கவில்லை. உச்சி நேர