10
கப்பலோட்டிய தமிழன்
மாகியும் உணவருந்தியபாடில்லை. வீட்டிற்குள் சென் றால் வைதீகத்திற்கு விரோதமென மனைவி மறுப்பாள் ஊருக்குள் சென்றால் தேசத் துரோகி என மக்கள் வெறுப்பர். என் செய்வார்! " ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்" என்னும் பழமொழி அந்த வழக் கறிஞர்பால் உண்மையாயிற்று.
இனி வேறு வழி இல்லையென உணர்ந்து, கலெக்டரி டம் நேரில் சென்று, "துரையவர்களே! க்ஷவரத் தொழிலாளர்க ளெல்லாம் என்னைக் கைவிட்டனர். தாங்கள்தான் தயவு செய்ய வேண்டும். போலீசுக்கு உத்தரவு கொடுத்தால் போதும்" என்று புலம்பினார். அந்த வழிக்கு நான் வரமாட்டேன்; என்னை நம்பிப் பயனில்லை " என்று று கை விரித்தார் கலெக்டர்.
இந்நிலையில், வழக்கறிஞர் திண்டாடித் தெருவில் அலைந்து பின்னர் ரயிலேறித் திருநெல்வேலிக்குச் சென்று மீதியுள்ள சிகையையும் சிரைத்துக்கொண்டு ஊர் திரும்பினார்.
து கற்பனை அல்ல; உண்மை வரலாறு. இதற்குக் காரணமென்ன?
ஹார்வி
தூத்துக்குடி கோரல் மில் (இப்பொழுது மில்) தொழிலாளர்கள் தங்கள் கூலி விகிதத்தை உயர்த்த வேண்டுமென்று மில் நிர்வாகிகளிடம் விண் ணப்பித்துக் கொண்டார்கள். நிர்வாகிகள் தொழிலா ளர்களின் குறையைத் தீர்க்கச் சம்மதிக்கவில்லை. ஆகவே, தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஒருமனப் பட்டு வேலை நிறுத்தஞ் செய்தனர்.மெய் வருந்
த