உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கப்பலோட்டிய தமிழன்







ரர்களின் சுக துக்கங்களை தனது சுக துக்கங்களாக எண்ணி வழக்கை நடத்துவார். கட்சிக்காரர்களிடம் ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பா பாராட்டா மல் எல்லோரையும் ஒரே விதமாக மதிக்கும் இயல்பு டையவர். வழக்கறிஞர் தொழலில் வ.உ.சி யிடம் இருந்த கடமை உணர்ச்சியும், நேர்மை உள்ளமும் கண்டு நீதிபதிகள் அவரைப் பெரிதும் மதித்து வந்த

னர்.

வாணிபத் தொழிலில் கொள்வோருக்கும் கொடுப் போருக்குமிடையே கைக்கூலி வாங்கும் தரகர்கள் உண்டு. வாணிபத்தில் பிறந்த இந்த முறை, வக்கீல் தொழிலிலும் புகுந்து வளர்ந்து வந்தது. கட்சிக்கா ரர்களைகொண்டு வந்து விடுத்து வக்கீலிடம் 'கமிஷன்' பெறுவது இந்தத்தரகர்களின் வழக்கம். இதை வ.உ. சி. முற்றும் வெறுத்தார். இந்தச் செய்கை வக்கீல் தொழிலின் சிறப்பைக் குறைப்பதாகவும் கருதினார். பெரும்பாலும் கட்சிக்காரர்களிடமிருந்து வக்கீல்கள் அதிக அளவிற்குப் பணம் பறிக்கவே இந்தத் தரகர் கள் பயன்பட்டு வந்தனர். வ.உ.சி. தாம் எழுதிய பாடல்ஒன்லும் "வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்யும் திக்கிலார்" என்று ஒழுக்கங் கெட்ட வக் கீல்களைப் பற்றி குறை கூறுகிறார்.

போலீசார் யார் மீதாவது தவறாக வழக்குத் தொடுத்திருப்பதாகத் தமக்குத் தோன்றினால், அந்த நிரபராதிக்குத் துணையாக நின்று கைம்மாறு கருதாது தம்மால் இயன்ற உதவியைச் செய்வார். இதனால் போலீஸ் அதிகாரிகளின் ஆத்திரத்திற்கும், அதிகாரக்