உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

21







கொடுமைக்கும் ஆளாக வேண்டி இருப்பினும் அவர் அஞ்ச மாட்டார். சாட்சிக்கூண்டில் போலீசார் நிற்க நேர்ந்து விட்டால் போதும்; வினாவென்னும் கோல் கொண்டு அவர்களை விரட்டி விரட்டி அடிப்பார்.

அவரது போக்கில் வெறுப்பு கொண்ட அதிகாரி கள்.ஹெட் கான்ஸ்டேபிள் சுப்பிரமணியம் என்பவ ரைக் கொலை புரிந்ததாக வந்த வழக்கில் அவரையும் ஒரு குற்றவாளி ஆக்கினர். அந்தவழக்கில் குற்றவாளி களுக்காகசிதம்பரனார் கோர்ட்டில் தோன்றாமல் செய் வதற்காகவே அதிகாரிகள் இந்த சதிச்செயலைப்புரிந்த னர். இந்தக் கொலை வழக்கில் சிதம்பரனார் எதிரிகளின் வக்கீலாக வருவதில்லை என்று வாக்குறுதி தந்தால் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கி விடுவதாகப் பேரம் பேசினர்! சிதம்பரனார் சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லும் திறனுடையவர். எனவே, எதிரிகளுக்காக வழக்காடுவதில்லை என்று வாய் மொழியாக வாக்குறுதி தந்து அதிகாரிகள் சதி யிலிருந்து விடுதலை பெற்றார். ஆனால், அந்த நிரபராதி களுக்காக தாம் ஆற்ற வேண்டிய கடமையைக் விடவில்லை. கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிதம்பரனார் எதிரிகள் சார்பில் தோன்றி வழக் காடி, வெற்றியும் பெற்றார். சிதம்பரனார் வாக்கு றுதியை மீறி, எதிரிகள் சார்பில்நின்று வழக்காடியது கண்டு ஆத்திரங் கொண்ட அதிகாரிகள், அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிராசிக்ஷன் தரப்பு சாட்சியை, எதிரிகள் தரப்புக்கு இழுக்க முயன்றதாக அவர் மீது வழக்கு

கை