உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பகுப்புரை

இந்திய சுதந்தரப் போரில் ஈடுபட்டு, இன்னல் பல ஏற்றவர் சிதம்பரனார்.

தமிழரின் தன்மானத்தைக் காக்க, வீரர் சிதம்பரனார் கண்ட கனவுகளை இன்று நம்மிடையே இருந்து அதை நனவாக்கிக் கொண்டிருப்பவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். வீரர் சிதம்பரனாருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் சிறப்புப் பெயரை வழங்கி அவரது புரட்சிமிக்க செயல்களை எழுத்தினாலும் பேச்சினாலும் தமிகத்திலும் வெளி இடங்களிலும் பரவச்செய்பவர் திரு. ம.பொ.சி. அவர் எங்கு சொற்பொழிவாற்றினாலும், அதில் புரட்சி வீரர் சிதம்பரனாரின் புகழ் இடம் பெறாமலிருக்காது.

ஒருவரின் வரலாற்று நூலைப் படிப்பவர்களுக்கு சலிப்புத் தட்டா வண்ணம், ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இனிய நடையில் எழுத முடியும் என்பதை இந்நூலின் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார் ம.பொ.சி. தமிழில் இதுவரை எந்த வரலாற்று லும் ஐந்து பதிப்புகள் வெளிவந்ததில்லை. அந்தப் பெருமையை கப்பலோட்டிய தமிழன் என்னும் இந்நூல் பெற்று விட் து.இது வரை பதினாயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகளை வாங்கி ஆதரவு தந்த தமிழ்ப் பெருமக்களுக்கு எங்கள் இதய பூர்வமான நன்றி உரித்தாகுக.

3"

இந்த ஐந்தாம் பதிப்பையும் வெளியிடும் வாய்ப்பை எங் களுக்கு அளித்த திரு. ம.பொ.சி. அவர்களுக்கு நன்றியோடு கூடிய வணக்கம். வ.உ.சி. மீது தாம் இயற்றிய பாடலை இந்நூலில் சேர்க்க இசைந்த நாமக்கல் கவிஞர் அவர்களுக்கும் எமது நன்றி.

சென்னை 21-6-49

சோ.ம.சுவாமினாதன். இன்ப நிலையம்