56
கப்பலோட்டிய தமிழன்
விடங்களில் 89 பேர்களைப் போலீசார் கைது செய்து வழக்குத் தொடுத்ததில், ஒருவர் விடுதலையானார்; மற்ற வர்கள் பலவித தண்டனைகள் அடைந்தனர்.
கொடுந் தண்டனை !
து
1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23, 26-ந் தேதிகளி லும் மார்ச்சு 1, 3- ந் தேதிகளிலும் அரச நிந்தனையா கப் பேசியதாக 123-ஏ. பிரிவுப்படியும், சுப்பிரமணிய சிவாவுக்கு இடமும், உணவும் அளித்து உதவியதாக 153-ஏ.பிரிவுப்படியும், சிதம்பரம் பிள்ளை மீது போலீ சார் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு திருநெல் வேலிஜில்லா அடிஷனல் மாஜிஸ்திரேட் ஈ. எச்.வாலேஸ் முன்பு மார்ச்சு மாதம் 26-ந் தேதி விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்டது. சிதம்பரனாரின் சொற்பொ ழிவுகளில் ஆட்சேபகரமானவையென சர்க்கார் தரப் பில் கூறப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:-
"மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டி விடலாம். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டோம் எனத் தெரிந்தால் போதும், அவர்களே போய் விடுவார்கள்.
CC
11
இந்தியாவில் 50 ஆயிரம் வெள்ளையர்கள் உள் ளனர். கட்டாயத்தின் பேரில் அவர்களை வெளி யேற்றுவது எளிதேயாகும். ஆனால், இந்தியர்கள் பலாத்காரஞ் செய்யக் கூடாது. என்றாலும் வெள் ளையருக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை.
இந்தியர்கள் தாங்கள் தீர்மானித்தபடி அன் னிய நாட்டுத் துணி, சர்க்கரை, எனாமல் பாத்தி ரம் முதலிய பொருள்களை வாங்காமல் இருந்தால் ஆங்கிலேயர் தாங்களாகவே இந்திய இந்தியாவை விட்டு போய் விடுவார்கள்."
ய