கப்பலோட்டிய தமிழன்
77
.
a
துன்பத்திலும் இணைபிரியாதவர்கள். ஆகவே, சிதம் பரனார் சிறையில்படுந்துன்பத்தை அறிந்து, பாரதியார் நெஞ்சங் குமுறினார். அந்த மேலோன் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதைக் கேட்டு அவர் நெஞ்சு பொறுக்க வில்லை.மெய்யறம்' போன்ற நீதி நூல்கள் எழுதிய சிதம்பரனாரின் கைகள் சிறையில் செக்குவலிப்பதைக் கேட்டுக் கண்ணீர் விட்டார் பாரதியார்.
தமது அருமைத் தோழர் சிதம்பரனாருக்குற்ற துன்பம் மனித சக்தியால் நீக்க முடியாததென்று எண்ணினார் போலும்! ஆகவே, அவர் சர்வ வல்லமை வாய்ந்த இறைவனிடம் முறையிடலானார்.
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து
கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ! மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ!
என்ற பாரதியார் பாடலிலுள்ள வரிகள், நமக்கு எதை நினைவூட்டுகின்றன? முப்பது வயதில்- காதற் பருவத்தில் - மனைவியைத் துறந்து, மக்களைப் பிரிந்து சிறையில் வாடிய சிதம்பரனாரின் துன்பத்தையே அல்லவா?
-
சிதம்பரனாரை 'மேலோன்' 'நூலோன்' 'காதல் இளை ஞன்' என்றெல்லாம் கூறிக் கடவுளுக்கு அறிமுகப் படுத்துகிறார் பாரதியார். அந்த வீரன், 'சிறையில் வீழ்ந்து கிடப்பதை, செக்கடியில் நோவதை, மனையா ளைத் துறந்ததை, மக்களைப் பிரிந்ததை, கண்ணனூர்ச் சிறையில் கருத்தழிந்து வாடுவதை, இறைவா, நீ காணாயோ!" என்று கதறுகின்றார்.