உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

கப்பலோட்டிய தமிழன்







யப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்தப் பிரசுரங்களின் விளைவாக சென்னை அரசாங்கம் தேசபக்த ளைஞர்களை வேட்டையாடத் துவங்கிற்று.கரூர் கிருஷ்ணசாமி என்ற பிரபல தேச பக்தர் உள்பட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மீது பலாத்காரக் குற்றங்கள் சாட்டி கடுந்தண்டனை விதித்தனர் அதிகாரிகள். சில புரட்சிக்காரர்கள் ரகசி யட் போலீசாரின் கண்களுக்குத் தப்பி பிரஞ்சுத் தமி ழகமான புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தனர். இவர் களில், நீலகண்ட பிரமச்சாரி, சங்கர கிருஷ்ணையர், எம்.பி திருமலாச்சாரி ஆகியவர்கள் முக்கியஸ்தர்களென ரௌலட் அறிக்கை கூறுகிறது. புதுச்சேரியிலிருந்த தமிழகத்துப் புரட்சிக்காரர்கள் லண்டன், பாரிஸ் போன்ற வெளி நாடுகளிலிருந்த இந்தியப் புரட்சிக் காரர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டனர். இந் தக் காலத்தில், லண்டனிலுள்ள "இந்தியா மாளிகை” இந்தியப் புரட் சிக்காரர்களின் பாசறையாக இருந்தது. வி நாயக தாமோதர சவர்க்கார் இந்தப் புரட்சிக்காரர் களின் தலைவராக இருந்தார். தமிழ் நாட்டுப் புரட்சி வீரரான வ.வே.சு ஐயர் சவர்க்காரின் வலது கர மாகத் திகழ்ந்தார்.

தூத்துக்குடிப் புரட்சிக்குப் புத்துயிர் அளிப் பதில்லண்டன் இந்தியா மாளிகை கவனம் செலுத் தியது. புதுவையில் அடைக்கலம் புகுந்த புரட்சி யாளர்களில் சிலர் பாரிஸ் வழியாக லண்டன் 'இந்தியா மாளிகை' சேர்ந்தனர். 1910-ம் ஆண்டு இறு திக்குள் தென்னிந்தியப்புரட்சிக்கு ‘இந்தியா மாளிகை'