கப்பலோட்டிய தமிழன்
83
யில் திட்டம் உருவாகி விட்டது. லண்டனில் தங்கி யிருந்த வ.வே.சு.ஐயர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் அங்கிருந்து பாரிஸ் வழியாக புதுச்சேரி வந்து சேர்ந்தனர். அதுமுதல் புரட்சிப் புயல் தென் பாண்டிநாட்டிலும் வீசத் தொடங்கிற்று. கலெக்டர் ஆஷ் கொலை
ஆஷ் என்பவர், அப்போது திருநெல்வேலி கலெக்ட ராக இருந்தார். அவர் சப் - கலெக்டராக இருந்த போது செய்த கொடுமைகளுக்காகப் பழி வாங்குவ புதுவையிலிருந்த புரட்சிக்காரர்கள் தீர் 1911-ம் ஆண்டு
தென்று மானித்தனர்.
ஜூன்
17-is
தேதி ஆஷ், ரயிலில் கோடைக்கானலுக்குச் சென்று கெ காண்டிருந்தார். ரயில் மணியாச்சி ஸ்டஷேனை டைந்ததும் அதே வண்டியில் கலெக்டருடனேயே பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் தமது கைத் துப்பாக்கியால் கலெக்டரைச் சுட்டுக் கொன்றார். மறுகணமே அவர் மலங்கழிக்கும் அறைக் குள் நுழைந்து தம் வாய் வழியாகச் சுட்டுக் கொண்ட தால் தலை சுக்கல் சுக்கலாக நொறுங்கி மாண்டார். தம்மை அடையாளம் கண்டு பிடிப்பதன் மூலம் தமது புரட்சித் தோழர்களை அரசாங்கம் கைது செய்து விடாமல் தடுப்பதற்காகவே இந்தப் புதுமுறையான தற்கொலை உபாயத்தை அவர் கையாண்டார். ஆனால், அவரது எண்ணம் ஈடேறவில்லை. அவர் காட்டிலாகா
காரியான செங்கோட்டை ரகுபதி ஐயரின் குமா ரர் வாஞ்சிநாத ஐயர் என வழிப்போக்கர் ஒருவரால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டார். சட்டைப்