கப்பலோட்டிய தமிழன்
85
இந்தக் கொலைக்குப் பிறகு போலீசார் தீவிரமாகப் புலன் விசாரித்து கல்கத்தாவில் வசித்து வந்த தஞ்சை ஜில்லா எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தென்காசி.டி.எஸ். சிதம்பரம் பிள்ளை ('தினசரி' ஆசிரியர் திரு.டி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளையின் தமையனார்) உள்பட மொத்தம் பதினான்கு பேர்களைக் கைது செய்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி தன்காசி, செங்கோட்டை ஆகியவிடங்களில் இரக சிய சங்கங்களை நிறுவியதாகவும், ஒரே சமயத்தில் தமிழ் நாட்டின் பலவிடங்களில் பலாத்காரப் புரட் சியை உண்டு பண்ண சதி செய்ததாகவும் இவர்கள் மீது குற்றங்கள் சாட்டப்பட்டன. இவ்வழக்கு செஷன்ஸ் கோர்ட்டாரால் விசாரிக்கப்பட்டு ஒன்பது பேர்களுக்குப் பலவித தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஐவர் விடுதலை பெற்றனர்.
விடுதலை
சிதம்பரம் பிள்ளையவர்கள் தமது தண்டனைக் காலத் தைக் கோயமுத்தூர், கண்ணனூர்ச் சிறைகளில் கழித்துவிட்டு, 1912-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடு தலை யடை டந்தார். பின்னர் சென்னையில் மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகள் வசித்து வந்தார். சிதம்பரனார் சிறை மீண்டதும், சுப்பிரமணிய சிவாவைத் தவிர, இவரை வாவென் றழைப்பார் எவருமில்லை. பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளி வந்த சிதம்பரனாரைக் கண்டதும், "அப்பா சிதம்பரம்
.