பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கப்பலோட்டிய தமிழன்

சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுச் சிறை சென்றார். தென்னாட்டு திலகரும், வடநாட்டு வ.உ.சி.யும் ஒரேசமயத்தில், தேச விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்ற சம்பவம் அப்போது இந்தியாவையே சிலிர்க்க வைத்தது எனலாம்.

சிதம்பரனார் சிறையில் அடைபட்டு விட்ட கோபத்தால் கொந்தளித்த பாரதி, நெல்லை நீதிமன்றம் சென்று சிதம்பரனார் சார்பாக நாம் சாட்சியம் கூறியும், வழக்குத் தீர்ப்பு இவ்வளவு கடுமையாக வந்து விட்டதே என்று கவலையடைந்தார். இருந்தும், அந்த சினத்தைத் தணித்துக் கொண்டு வ.உ.சி.க்காக ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடியபடியே திருவல்லிக்கேணி வீதியில் பாரதியார் வலம் வந்தாராம். அப்பாடல் இது

வ.உ.சி.க்கு வாழ்த்து


“வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீவாழ்தி வாழ்தி!”

– என்று பாடினார் பாரதி. அதே வாரத்தில் ஆறாண்டு தீவாந்தர தண்டனை பெற்று சிறை சென்ற திலகர் பெருமானைப் பற்றிக் கண்ணீர் விடுத்து பாரதியார் பாடிய வேறோர் வாழ்த்துப் பாடல் வருமாறு :