பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

61

தலைமை நீதிபதியான ஆர்னால் ரைட், நீதிபதி மன்றோ ஆகியோர் அவரது வழக்கை விசாரணை செய்தார்கள். ஆட்சி சார்பாக, பாரிஸ்டர் ரிச்மாண்ட் வாதாடினார்.

சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹே அளித்த தண்டனையைக் குறைக்கக் கூடாது என்று ரிச்மாண்ட் வன்மையாகவே வாதாடினார். 1908-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் நாள் தீர்ப்புக் கூறும் போது, “ராஜத் துரோகத் தண்டனை”க்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு தண்டனையை நான்கு ஆண்டுகள் என்றும், அதே போன்று சிவாவுடன் உடந்தையாக சிதம்பரனார் இருந்தார் என்பதற்காக விதிக்கப்பட்ட20 ஆண்டுத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது. அதாவது, சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹேயால் விதிக்கப்பட்ட 40 ஆண்டு தண்டனையில் 30 ஆண்டுகளைக் குறைத்து 10 ஆண்டுகள் தண்டனை என்று உயர்நீதி மன்றம் விதித்தது.

சிதம்பரனார் நண்பர்களது அரிய முயற்சியால், உயர்நீதி மன்றம் அளித்த 10 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து லண்டன் பிரிவிகெளன்சில் நீதிமன்றத்துக்கு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, அங்கு அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு வருடம் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.