பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அங்க அமைப்பு லக்ஷண வர்ணனை 89 எவ்வளவு துன்பம் வந்தாலும் பாராட்டாது சஹிக்கக் கூடிய திட சித்தத்தையும் பொறுமையையும் காட்டி நின்றன. துள்ளித் துள்ளி விழும் மீன்கள் போலச் சலிக்கும் அவளுடைய கண்களும், அவளுடைய கன் னங்களில் உண்டாகும் சுழிகளும், அவளுடைய அழ கான பல்வரிசையும் அவள் முகத்திற்கு ஓர் அபூர்வ மான வசீகர சக்தியை உண்டு பண்ணின. அவ ளுடைய கண்களின் தோற்றம் வெகு அரிதான குளிர்ச்சியையும் மிருதுத் தன்மையையும் உடைய தானாலும், தேவையான காலத்துக் கண்டோரைக் கலக்கத்தக்க 'உடலினுயிரையுமுணர்வையு நடுவு போயுருவு மதர்விழி' என்ற லட்சணத்திற்குப் பொருந்திய ஒரு கூர்மையான பார்வையும் அவை களுக்கு உண்டென்று நினைக்க இடமிருந்தது. ஸ்ரீநி வாசனுடைய முக அழகு வேறுவிதம். அவனது உயர்ந்த மண்டையும், உருண்டை முகமும், விசால மான நெற்றியும் அவனுக்கு ஓர்வித கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்தன. அவனது சற்றுக் கீழ் நோக்கிய கண்களும், சிறிது முன்னே வந்து ஒன்றின் மேல் ஒன்றாய்ப் படிந்திருக்கும் அவன் உதடுகளும் சாந்தத்தையும், சிற்சில சமயங்களில் சோர்வையும் உணர்த்தின. ஆனால் அவனுடைய கூர்மையான மூக்கும், ஓயாது சலிக்கும் கண்களும் அவனுடைய முகத்தில் மந்தமான தோற்றமென்பதே இல்லாமல் நீக்கி, அவனுடைய தீட்சண்யமான புத்தியையும் மனோகரமான சுறுசுறுப்பையும் ஹிருதயபூர்வமான உற்சாகததையும் பிரகாசிக்கச் செய்தன. ஓங்குமலைக்காட்டி னுள்ளிருந்து தூங்காமல தூங்குசப்ர மஞ்சமிசைத் தூங்கு நவரசத்தேன் மொயத்தமலைக்காட்டு முள்ளு டலையாமல் மெத்தையின்மே லேறிவிளையாடுந் தோகைமயில். என்றிப்படி எவ்விதம் வர்ணித்தாலும் போதாத