உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



90 கமலாம்பாள் சரித்திரம் - - - அழகு பொருந்திய லட்சுமியும் அவளுக்காகவே சிருஷ்டி செய்யப்பட்டவன்போல் தோன்றிய 'சித் திரத்தும் எழுதொணா வனப்பினனாகிய' (சித்திரத்தில் கூட எழுதமுடியாத அழகையுடைய) ஸ்ரீநிவாசனும் மணவரையில் உட்கார்ந்திருந்த கண்கொள்ளாக் காட் சியைக் கண்டு சந்தோஷியாதவர்கள் கிடையாது. அவர்கள் ' நலங்கு' இட்டதும், தேங்காய் உருட்டிப் 'பூலாச்செண்டு' ஆடியதும் வெகு நேர்த்தியாயிருந் தன. ஸ்திரீகள் எல்லாரும் ஸ்ரீநிவாசனுடன் பேசு வதை ஒரு பெரிய ஆநந்தமாய் நினைத்தார்கள். சற்றேறக்குறைய அவன் வயதுள்ள பெண்கள் மனதில் கொஞ்சங்கூடக் களங்கம் இல்லாமல் அவனுடன் பரிகாசம் செய்து விளையாடினார்கள். விசாலாட்சி என்ற ஒரு பெண் அவனைப் பார்த்து மாப்பிள்ளைக்கு ஆனாலும் இவ்வளவு கர்வம் ஆகாது,' என்று சொல்லி விட்டு இடி. இடி என்று சிரித்தாள். சுப்புலட்சுமி என்ற பெண் ' அப்படிச் சொல்லாதேயடி, என்னம் மங்காளகமுடையான் நிரம்ப சாது. அடித்தால்கூட அழத்தெரியாது' என்றாள். பாகீரதி அவன் முதுகில் அப்பளம் உடைத்தாள். காவேரி அவனுடைய ஜடை சிங்காரத்தைப் பற்றியிழுத்தாள். காமாட்சி ' என்னத் தங்காள் அகமுடையானுக்குப் பெண்வேஷம் போட். டால் நன்றாயிருக்கும்' என்றாள். இவ்விதமாக எல் லாப் பெண்களும் ஏதாவது உறவு கொண்டாடிக் கொண்டு இவனைப் பரிகாசம் செய்தார்கள். முதலில் சுப்பராயன் கூட இருக்கும் போது கொஞ்சம் கூச்சப் பட்டார்கள். வர வர அவனிருந்தாலும் சட்டை பண் ணுவதில்லை. மூன்றாம் நாள் கலியாணத்தன்று ஸ்ரீநிவாசன் ஒளபாசனம் பண்ணிக்கொண்டிருந்தபொழுது கோதா வரி என்ற ஒரு பெண் சந்தடி செய்யாமல் பின்பக்கம் வந்து ஒரு சுருக்கிட்ட கயிற்றால் அவனுடைய தலைப்