உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



11 பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள் முத்துஸ்வாமி அய்யருடைய கிரஹத்தில் நடந்த நிச்சயதார்த்தத்துக்குக் கூட அவர் தம்பி சுப்பிரமணி' யய்யர் போகவில்லை யென்று முன்னமேயே நாம் சொல்லியிருக்கிறோமல்லவா? அவர் பாரிசத் தலைவலி யுடன் படாத பாடுபடுகிறார் என்று அவரைக் கூட்டி வரப்போன சுப்புளி என்பவன் மூலமாக அறிந்த முத்துஸ்வாமி அய்யர் நிச்சயதார்த்தம் முடிந்த மறு நிமிஷமே அவரைப் பார்த்து வரும்படி அவர் வீட் டிற்குச் சென்றார். அவர் வருவதைக் கண்ட சுப்பிர மணியய்யர் முன்னிலும் பதின்மடங்கு அதிகமாய் அலத் திக்கொண்டு படுக்கையில் கிடந்து அங்கும் மிங்கும் தலை விரிகோலமாய்ப் புரளத் தொடங்கினார். அவர் அருமை மனைவியாகிய பொன்னம்மாளோ அவ ருடைய தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு ஐயையோ தெய்வமே, என்ன செய்வேன் என்ன செய்வேன்' என்று தேம்பித் தேம்பி கண்ணீர் பெருக் கிய வண்ணமாயிருந்து மைத்துனருக்கு நாணினவள் போல் உள்ளே சென்றாள். இவர்களுடைய கோலத் தைக் கண்ட முத்துஸ்வாமி அய்யருக்குத் தன்னை யறி யாமலே கண்களில் ஜலம் வந்துவிட்டது. அதை அவர் ஜாடையாய்த் துடைத்துக்கொண்டு ' சுப்பிரமணியம், சுப்பிரமணியம், என்ன செய்கிறதடா அப்பா? தலை வலியானால் முன்னமேயே எனக்குச் சொல்லிவிட வேண்டாமா' என்று சொல்லி அவருடைய தேகஸ்தி தியை நுட்பமாய் விசாரித்துக்கொண்டு அவருடைய கையைப் பிடித்துப்பார்த்தார். கைநாடி வெகு சரி யாக இருந்தது. அதில் யாதோரு வித்தியாசமும் தெரிய