உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொடிய சாஹஸி செய்த மோசம் 101 வில்லை. பிறகு தலையைப் பிடித்துப் பார்த்தார். அங்கும் ஓர்வித மாறுபாட்டையும் காணோம். இவ்வளவு கொடுமையான தலைவலிகூட கைநாடி.யில் காட்டப் படாததைக் கண்டு அவர் ஆச்சரியத்துடன் சிறிது தலை நிமிர்ந்தார். நிமிரவே, தான் செய்த தந்திரத்தைத் தன் மைத்துனர் கூடத் தாராளமாய் நம்பியதைக் கண்டு சிரிப்பு வர, அதை அடக்கும்படி தன்னால் ஆன மட்டும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த பொன்னம்மாளு டைய முகம் அவர் கண்களுக்குத் தற்செயலாய்த் தென்பட்டது. அதைக் கண்டவுடன் தலைவலி பொய்யோ மெய்யோ என்று சந்தேகப்பட்டுக்கொண் டிருந்த அவருக்குப் பொறுக்க முடியாத கோபமும் வருத்தமும் பொங்கிற்று. அந்தக் கொடிய சாஹஸி செய்த மோசத்தையும் அவள் கையில் அநியாயமாய் அகப்பட்டுப் பம்பரம் போல் தவித்துத் தத்தளிக்கும் தன் தம்பியின் நிலைமையையும் தன் நுட்ப புத்தியினால் கண்ட அவருக்கு அப்புறம் அரை நிமிஷமாவது அங்கேயிருக்கச் சகிக்கவில்லை. உடனே அவர் நான் போய் வைத்தியரை அனுப்புகிறேனென்று சொல்லி விட்டுக் குபீர் என்று எழுந்திருந்து வெளியே போய் விட்டார். மறுநாள் தன் தம்பியை வரவழைத்து உடம்பு ஸ்திதியைப் பற்றிச் சற்று விசாரித்துவிட்டு, நிரம்ப வருத்தப்பட்டவர் போலச் சிறிது நேரம் மௌனமாயிருந்து பிறகு அவரைப் பார்த்து 'பைத் தியக்காரா, போ, பைத்தியக்காரா! பெண்டுகளுக்குள் ஆயிரமிருந்தாலும் அதை யெல்லாம் நாம் மேலே போட்டுக் கொள்ளலாமோ' என்று ஜாடையாய்க் கண்டித்து விட்டு, கல்யாண விஷயங்களைக் குறித்து அவரை சில யோசனைகள் கேட்டு, பிறகு 'ஆயிரம், ஆயிரத்தைந்நூறு ரூபாய்க்கு ஜவுளி வாங்க வேண்டும். இப்பொழுது முதல் சாமான்களைத் தயார் செய்தால் தான் முகூர்த்தத்துக்குச் சரியாக வரும். நீதான் எல்லா வற்றையும் பொறுப்பாய்ப் பார்க்கவேண்டும்' என்றார்.