102 கமலாம்பாள் சரித்திரம் அவரும் அவைகளை அப்படியே செய்வதாகத் தாராள மாய் ஏற்றுக்கொண்டார். அவர் தன் தமையனிடத் தில் நிரம்ப பயபக்தி விசுவாசமுள்ளவர், அவரைப் பிதாவுக்குச் சமானமாய்ப் பாவித்து வந்தார். அவ ரிடத்தில் எதிராக நின்றுகூடப் பேசமாட்டார். கல் யாணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும், அவ! ருடைய சகோதர வாஞ்சையையும், மரியாதையையும், விதரணையையும் நிரம்பக் கொண்டாடும்படி கல் யாணக் காரிய முழுவதையும் அவரே பொறுப்புடன் ஏற்றுச் செய்தார். இவர் எவ்வளவுக்கெவ்வளவு கல்யாணத்தைப் பரிமளிக்கச் செய்தாரோ, அவ்வள வுக்கவ்வளவு அவர் மனைவி பொன்னம்மாள் அதைக் கெடுக்கப் பிரயத்தனப்பட்டாள். கல்யாணத்தைத் தடுத்துவிடக்கூட அவள் சில முயற்சிகள் செய்தாள். நல்ல வேளையாய் ஒன்றும் பலிக்கவில்லை. பிறகு அதைத் தடுக்காவிட்டாலும் கெடுத்தாவது விடுகிற தென்று தீர்மானம் செய்துகொண்டு, சமையலைப் பழித்தாள், சீர்வரிசையைப் பழித்தாள், பெண்ணைப் பழித்தாள், கடைசியில் கமலாம்பாளைப் பற்றி அவ ளுடைய சம்பந்திகளிடத்திலேயே அவதூறு பேசத் துணிந்தாள். நடந்த சங்கதி முழுவதையும் தன் நுட்ப புத்தியாலறிந்த கமலாம்பாள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போனதுமன்றி தங்களைப்போல் ஓர்ப்படிகள் உலகத்தில் கிடையாதென்று கண்டோர் சொல்லும்படி அவளுடன் சிரித்து விளையாடிப் பரி காசம் செய்தாள். அவளுடைய சுபாவம் பெருந் தன்மையான சுபாவமானதால், முன்னே தன்னைப் பொன்னம்மாள் ஆற்றங்கரையில் வைத வசவுகளெல் லாம் அவளுக்கு ஞாபகங்கூட இல்லை. இவள் அன்பு பாராட்டப் பாராட்ட பொன்னம்மாளுக்கு இவ ளிடத்தில் பொறாமை அதிகமாயிற்று. சுப்பிரமணி யய்யர் ஓடி ஓடிக் காரியம் செய்வதைக் காணும்போ தெல்லாம் அவளுக்கு உண்டான கோபத்திற்கும் எரிச்