108 கமலாம்பாள் சரித்திரம் வைத்தால் அவர் நிறம்மாறியிருப்பதைக்கண்டு சந்தே கித்து விடுவார் என்று பயந்து. தன் கையிலேயே வைத்துக்கொண்டு இடதுகையால் அவரை கட்டி யணைத்து மார்புமீது சாத்திக்கொண்டு தானே அவ ருக்கு அந்தப் பாலைப் புகட்டினாள். அவள் அதன் மேல் சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து இவ் வளவு சாகஸம் செய்ய அதையறியாத சுப்பிரமணிய அய்யர் அவளுடைய விசேஷ அன்புக்கு இதை ஓர் அடையாளமாக எண்ணி ' இவ்வுலகத்தில் என்னைப் போல் யார் பாக்கியவந்தர்களிருக்கிறார்கள்' என்று தன்னையே புகழ்ந்து கொண்டு அவள் அழகின் மயக்கத் தால் பாலின் ருசியைக்கூடப் பாராமல் சாப்பிட்டு விட்டார். சாப்பிட்டுச் சற்று நேரத்திற்கெல்லாம் (மருந்து மிதமிஞ்சிக் கலக்கப்பட்டிருந்ததால்) ' பால் என்ன, என்னமோ போலிருக்கிறதே' என்று சொல் லிக்கொண்டே வாந்தி பண்ண ஆரம்பித்துவிட்டார். பொன்னம்மாள் சீக்கிரம் போய்ப் பாத்திரத்தை -அலம்பிவைத்துவிட்டு அவர் தலையைப் பிடித்துக் கொண்டாள். பாலைக்குடித்த பிராமணர் பாவம் இரண்டு நாழிகைவரையில் வாயோயாமல் வாந்தி பண்ணி நிரம்ப கஷ்டப்பட்டார். அவர் மனைவி, வாந்தி பண்ணின போதிலும் அதிகமருந்து வெளியில் வந்துவிடவில்லையென்று கண்டு திருப்தியடைந்து 'பித் தம் அதிகரித்திருக்கிறது, பால்கூடச் சேரவில்லை. பிசா சலைகிறாற்போல் அலைந்தால் பித்தமதிகரிக்காமல் என்ன பண்ணும். எனக்கு அப்பொழுதே தெரியுமே. அந்த இழவு கல்யாணம் நல்லதுக்கா வந்தது, கல் லெடுப்பு. சுவாமி! இம்மட்டோடாவது போக வேண்டுமே, நான் என்ன செய்வேன்' என்று சொல் லிக்கொண்டே அழுவதாகப் பாவனை பண்ணினாள். சில ஸ்திரீகளுக்குப் பட்டணத்தில் குழாயைத்திருப்பி பனால் எப்படி ஜலம் வருகிறதோ அதுபோல் கண்ணைக் கசக்கினாற்போதும் பிரவாகம் புறப்பட்டுவிடுகிறது.