'மாயக்கல்வி வந்து மதிமயக்கமானேனடி 109 அப்படி வரிகொடுக்காமல் வேண்டிய கண்ணீர் வர வழைத்துக்கொள்ளும்படி வரம் வாங்கிவந்த அதிர்ஷ்ட சாலிகள் எல்லாரிலும் பொன்னம்மாள் அதிக விசேஷ மானவள். இப்படி அவள் அழத்துவக்கவும் சுப்பிர மணியய்யர் தன் வருத்தத்தைக்கூட மறந்து அவளை ஆற்றினார். இப்படியாக ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டே இருவரும் கண்ணயர்ந்தார்கள். ஆனால் தூங்குமுன், பித்தமதிகரித்திருக்கிறதென்றும் பித்த மதிகரித்ததினால் பால் சேரவில்லையென்றும் பால் சேராததினால் வைத்தியனைக்காலமே கூப்பிடவேண்டு மென்றும் அவர்களுக்குள் ஒரு தீர்மானம் செய்யப் பட்டது. அவர்கள் ஆடிப்பாடியமர வெகுநேரமாய் விட்டபடியால் இருவரும் அயர்ந்து நித்திரை போய். விட்டார்கள். இவர்கள் தூங்கி இரண்டு நாழிகைக்கெல்லாம் திடீரென்று 'ரணபாதகா, ரணபாதகா, கடன்காரா, ரணபாதகா' என்று ஓர் சப்தம் உண்டாயிற்று. அப் பொழுது முத்துஸ்வாமியய்யரும் கமலாம்பாளும் தங் கள் வீட்டு மாடியில் நெடுநேரம் வரையில் மாப்பிள்ளை, சம்பந்தி, கல்யாணம் முதலிய விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பிறகு பிரமானுபூதிச் செல்வராகிய தாயுமானசுவாமிகளுடைய திருவருட் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்பாடல் கள் அவர்களுக்கு ஓர் தெவிட்டாத திவ்விய தேஜோ மயாநந்தத் திருப்பாற்கடலாயிருந்தது. அவற்றை அவர்கள் ' மெய்ஞ்ஞானக் களஞ்சியம்' என்றும் 'பேரின்ப நிமல ஊற்று' என்றும் போற்றிப் புகழ்வது வழக்கம். அவர்கள் இன்பமடைந்திருக்கும் காலத் தில் அமிர்தமயமான சந்திரிகையுடன் பரவசப்படுத் தும் கானரசமும் சேர்ந்தால் எப்படியோ அப்படியும், துன்பம் வந்தகாலத்தில், எரிகின்ற கோடைப்பருவத் திற்குத் தென்றல் எப்படியோ அப்படியும் உதவிய