பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



110 கமலாம்பாள் சரித்திரம் அப்பாடல்கள் அவ்விருவருக்கும் சிறந்த ஓர் உயிர்த் - துணையாய் விளங்கின. சிற்றின்பத்திற்கும் பேரின்பத் திற்கும் சிறிது தூரந்தான் என்று காட்டுபவள்போலக் கமலாம்பாள் தாயுமான சுவாமிகளுடைய ஆனந்தக் களிப்பை வீணைக்கிசைத்து வீணையின் நாதமும் தன் குரலும் ஒன்றோடொன்று அன்னியோன்னிமாய் வேற் றுமை தெரியாது தழுவிக்கிடக்கும்படி 'ஆதியனாதியு மாகி- எனக்-கானந்தமாய் யறிவாய் நின்றிலங்குஞ் சோதி மௌனியாய்த்தோன்றி - அவன் - சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டிதோழி' என்று பாட லின் கருத்துடன் கொஞ்சி வெகு இனிமையாயும் மிருதுவாயும் பாட, முத்துஸ்வாமி அய்யர் சிற்சில சம -யங்களில் கூடப்பாடியும் மற்ற சமயங்களில் கேட்டுக் கொண்டுமிருந்தார். அங்கே பொன்னம்மாள் தன் புருஷனுக்கு விஷமிட்டுக்கொண்டிருந்தாள். இங்கே கமலாம்பாள் தானும் தன் புருஷனுமாய்ப் பேரின்பப் பாற்கடலில் ஆனந்தக்களிப்புடன் ஆடிப்பாடி விளை யாடிக்கொண்டிருந்தாள். இப்படி இருக்குங்காலத் தில் திடீரென்று அந்த இருண்ட ராத்திரியில் ' ரண பாதகா , ரணபாதகா கடன்காரா, ரணபாதகா' என்று மேலே சொல்லியபடி ஓர் கூக்குரல் கேட்கவே, இரு வரும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்தார்கள். கமலாம்பாள் நடுங்கிப்போய்விட்டாள். முத்துஸ்வாமி அய்யர் அவளைத்தைரியப்படுத்திவிட்டுக் கீழே இறங்கி வர, சமீபத்தில் ஒருவர் வீட்டில் பலர் கூடிப் பேசிக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்த சப்தம் கேட் டது. அது எருமைத்தொண்டை' குப்பாசாஸ்திரிக ளுடைய கிரஹம். அவர் சம்சாரம் பகிஷ்டையாயிருந் ததால் கொட்டத்தில் மாடுகட்டியிருந்த இடத்திற்குச் சமீபத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். அவள் அரை யில் ஒரு கறுப்புத் துணி கட்டியிருந்தாள். அந்த வீட் டில் ஒரு நொணாமரமுண்டு. அந்தமரத்தில் ஓர் பிசாசு இருப்பதாக ஊர் முழுவதும் பிரசித்தம். அந்த அம்