உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'ஐயையோ ! நொணா மரத்து பிசாசடா!' 111 மாள் அந்த மரத்துக் கருகில் படுத்துக்கொண்டிருந்த பொழுது இரண்டு திருடர்கள் மாடு பிடிப்பதற்காக அந்த வீட்டுச் சுவரேறி உள்ளே குதித்து மாடு பிடித்து வெளியேறும் சமயத்தில் அந்த அம்மாள் விழித்துக் கொண்டு விட்டாள். விழித்துக்கொண்டு திடீரென்று எழுந்திருந்து மார்பில் படீர் படீர் என்றறைந்து கொண்டு 'ரணபாதகா' 'ரணபாதகா' என்று கூக்குர லிட, அந்தத் திருடர்கள் அந்த இருட்டு ராத்திரியில் அவளையும் அவளுடைய கறுப்புத் துணியையும் பார்த்துவிட்டு 'ஐயையோ நொணாமரத்துப் பிசாசடா, நொணாமரத்துப் பிசாசடா' என்று உளறி யடித்துக் கொண்டு பிடித்த மாட்டை விட்டுவிட்டுக் கீழே குதித்து விழுந்தடித்து உயிர் தப்பியது தம்பிரான் - புண்ணியமென்று ஓடியே போய்விட்டார்கள். முத் துஸ்வாமி அய்யர் வந்தவுடன் குப்பா சாஸ்திரிகள் நடந்த சமாசாரத்தைச் சொல்ல எல்லாரும் சிரித் தார்கள். இந்த வேடிக்கையைக் கமலாம்பாளிடம் சொல்லஎண்ணி முத்துஸ்வாமி அய்யர் வீட்டை நோக்கித் திரும்புகையில் அவர் தம்பி சுப்பிரமணியய் யர் 'கள்ளன் , மாடு, நகை, மாடு, நகை கள்ளன்' என்று உளறிக்கொண்டு வேகமாய் எதிரே வந்தார். அவரைப் பார்த்து நடந்த சங்கதியைக் கேட்க பொன்னம்மா ளுடைய நகைகள், ரூபாயாக 500- ரூபாய், ஜோடி மாடு 5, புதிதாய் வாங்கிய ஜோடி உருமால் கட்டிக் காளைகள் எல்லாவற்றையும் கள்ளன் கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார். இவர் சொல்லி முடிக்குமுன் தீ, தீ என்று ஒரு அரவம் கிளம்பிற்று. எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்ப சுப்பிரமணியய்யருடைய பாரி வைக்கோற்போர் ஒன்று நெருப்புப்பற்றி எரிவதைக் கண்டார்கள். அந்தப் போர் சுமார் நாலு யானை உயர மிருக்கும். பர்வதம் போன்ற அந்தப் போரில் நெருப் புப்பற்றி எரிந்தது திருவண்ணாமலைக் கார்த்திகை -விளக்குப்போல் நெடுந்தூரம் ஒளிவீசிற்று. இருண்ட