ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம். ஸ்திரீ புருஷ சம்வாதம். மதுரை ஜில்லாவில் ' சிறுகுளம்' என்ற ஒரு கிரா மம் உண்டு. அந்த கிராமத்தின் நடுத்தெருவின் மத்தி யில் ' பெரியவீடு' என்று பெயருள்ள ஒரு வீடு இருந் தது. அந்த வீட்டில் கூடத்திற்கு அடுத்த ஓர் அறையில் கீழே ஒரு கோரைப்பாய் விரித்து அதன்மேல் ஒரு திண்டுபோட்டுச் சாய்ந்துகொண்டு ஒருவர் படுத்திருந் தார். அவர் நித்திரை தெளிந்து எழுந்திருந்தவுடன், 'ஆ, சம்போ , சங்கரா' என்று இரண்டு தடவை உரக் கக் கொட்டாவி விட்டுவிட்டு, காலைச் சொரிந்து கொண்டு, 'அடியே , அடியே' என்று கூவினார். அப் பொழுது கூடத்தில் ரவிக்கை தைத்துக்கொண் டிருந்த அவர் மனைவி இவர் குரல் காதில் கேட்ட வுடன் இரண்டுமுறை இருமிவிட்டு மௌனமாய் இருந்தாள். அதற்குள் படுத்திருந்த பிராமணர் அடியே, உன் னைத்தானடி, அடியே' என்று மறுபடியும் அழைத்தார். அதற்கு அவர் மனைவி கோபித்தவள் போல பாவனை செய்து கொண்டு, ' இங்கே அடியையும்
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/13
Appearance