உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் காணோம், நுனியையும் காணோம் ; அடியாம், அடிக்க வேண்டியதுதான். காசுகொடுத்துச் சந்தையில் வாங் கினாற்போல்தான். இனிமேல் அப்படிச் சொல்லுங் கள், வழிசொல்லுகிறேன்' என்று பரிகாசமாய்ச் சொன்னாள். அவர், 'சூ, சூ, எவ்வளவடா' என்று சொல்லி விட்டு, 'துரைமகளானாலும் பாரி உரியவனுக்கவள் ஊழியக்காரி' என்று சங்கீதம் பாடத் தொடங்கினார். மனைவி : ' உங்களைப்போல் அவன் ஒரு புருஷன் தானே. வேதநாயகம் பிள்ளையாம், கரியாவான். இனி வெள்ளைக்காரச்சிகளைப்போல் ஆரம்பிக்கவேண்டியது தான் ; அடியாவதென்ன அடி! எங்களப்பா இரண்டு கரை வைத்தாண்டார், எங்கள் பாட்டனார் மூன்று கரை வைத்தாண்டார்; சந்தையில் கொண்டுவந்து தள்ளிவிட்டாப்போல் 'அடி' என்று கூப்பிடுவது - என்ன ?" அவர் : 'மூன்று கரையாகப்போவானேன், அக் கரை இக்கரை குளக்கரை மயானக்கரை ஒன்று, ஆக் நாலு இருக்கிறதே.' மனைவி : ' எங்களுக்கு அதுதான் உண்டு; நீங்க - ளெல்லாம் ஸரபோஜி மஹாராஜா பிள்ளைகள்; உங் களுக்கும் எங்களுக்குமா, உங்களுக்கு நாங்கள் அடிமை தான்!" அவர் : ' அடியேன் செய்த பிழையை தேவரீர் பொறுத்தருளவேண்டும். சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராகிற்பொறுப்பது கடனே. ஓய் ராஜராஜேஸ்வரி கமலாம்பாள், தயவு செய்து கொஞ்சம் தீர்த்தம் சாதிக்கவேண்டும்.' மனைவி : 'எங்களாத்தில் தீர்த்தம் கொடுக்கிற வழக்கமில்லை.