உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இல்லை, இனிமேல் இல்லை' அவர் : ' கொடுத்தால் தான் உனக்குப் பிள்ளைக் குழந்தை பிறக்கும் பார்' (அப்பொழுது கமலாம் பாள் ஆறுமாதம் கர்ப்பம்). மனைவி : 'ஆ, இருக்கிற பெண்ணைக் காப்பாற் றினால் போதாதா, பிள்ளைக் குழந்தை இல்லையென்று இப்பொழுது யார் உங்களிடம் சொன்னார்கள்?' அவர்: 'சொல்லாவிட்டாலும் மனதிற்குள்ளாவது இருக்குமல்லவா? இப்பொழுது தீர்த்தம் கொண்டு வந்தால், இதற்கு மூன்றாவது மாதத்தில் ஒரு பெரிய ஆண்பிள்ளை பிறக்கும்.' மனைவி : ' மூன்று மாதம் போவானேன். இப் பொழுதே செல்லப்பிள்ளை நீங்கள் இருக்கிறீர்களே என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஒரு தட்ட டில், தேங்குழல், எள்ளுருண்டை முதலிய பக்ஷ ணங்களை எடுத்துக்கொண்டு, கையில் பனிபோல் ஜிலுஜிலென்று குளிர்ந்த தீர்த்தமும் கொண்டுவந்து நமது அய்யர் படுக்கை அருகில் வைத்துவிட்டு 'அப்பா!' என்று அவர்மேல் சாய்ந்து கொண்டாள். உடனே அவர் அவளை இறுகத் தழுவிக்கொண்டு பக்ஷணங்களை கணக்குப் பார்க்கப் புகுந்தார். பாதி சாப்பிட்டான பிறகு, தன் மனைவி பராக்குப் பார்த்திருந்த சமயங்கண்டு அவள் இரண்டு கைகளை யும் பிடித்துக்கொண்டு, 'ஏனடி, நிரம்பப் பெரிய மனு ஷியாய் விட்டாயோ? "அடியே" என்றால் ஸரபோஜி மஹாராஜா பிள்ளை என்று பரிகாசம் பண்ணுகிறாயா?' என்று கன்னத்தில் மெதுவாய் அடித்தார். அவள் சிரித்துக்கொண்டு, 'இல்லை, இனிமேல் இல்லை' என்று சொல்லிவிட்டு, 'மரியாதையாய்க் கையை விட்டுவிடு கிறீர்களா! இல்லாவிடில் கூச்சலிடட்டுமா?' என்றாள். அய்யர், 'கூச்சலிடு , யார் வருகிறார்கள் பார்ப்போம்' என்றதும் அவள் ஐயோ,' என்று மெதுவாகச் செல்